*கொடுத்த வாய்ப்பெல்லாம் முடிந்தது. இனி கட்டணம் செலுத்த வேண்டும்!*
இனி ஆதார் அட்டையில் (Aadhaar Card) உள்ள எந்தவொரு தகவலை மாற்றம் செய்ய வேண்டுமானாலும் பொதுமக்கள், அந்தந்த மாற்றங்களுக்கு தொடர்பான கட்டணத்தை செலுத்திய பிறகு தான் மாற்றங்களை வெற்றிகரமாக மாற்றம் செய்ய முடியும் என்று UIDAI அறிவித்துள்ளது.
அதாவது, இனி ஆதார் அட்டையில் பெயர் (Name), முகவரி (Address), புகைப்படம் (Photo) என எந்தவொரு தகவலை மாற்றம் செய்ய வேண்டுமென்றாலும், அதற்கென்று தனித்தனி கட்டணங்களை பொதுமக்கள் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை விபரங்களை இனி அப்டேட் செய்ய கட்டணமா?
UIDAI வெளியிட்டுள்ள தகவலின் படி, இனி புதிதாக ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்கும் புதிய ஆதார் பயனர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டை விபரங்களில் மாற்றங்களை மேற்கொள்ள, எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக 5 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளின் அட்டை அப்டேட்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியான தகவலின் படி, இந்த மாத இறுதி வரை மட்டுமே இலவச அப்டேட்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
வரும் மே 1, 2024 ஆம் தேதி முதல் ஆதார் அப்டேட் தொடர்பான அணைத்து சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
• https://chat.whatsapp.com/Ho1dnsMypq3K6dplPtyPmH
எந்த சேவைக்கு என்ன கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விபரங்களும் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அது குறித்த தகவல் இதோ. 👇👇
ஆதார் அட்டையில் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்டிற்கும் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக, உங்கள் ஆதார் அட்டையில் உள்ள உங்கள் பெயர் விபரம், பிறந்த தேதி மற்றும் முகவரி விபரங்களை மாற்றம் செய்ய இனிமேல் ஆதார் பயனர்கள் ரூ. 50 கட்டணம் கட்டாயம் செலுத்திட வேண்டும் என்று UIDAI தெரிவித்துள்ளது.
இந்த ஆதார் தகவலை மாற்ற ரூ. 100 கட்டாய கட்டணமா?
இது தவிர, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிற்கும் உங்கள் கை ரேகை விபரங்களை அப்டேட் செய்வது, அல்லது உங்கள் கண்ணின் கருவிழி விபரங்களை அப்டேட் செய்வதற்கு இனி ரூ.100 கட்டாய கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தவிர, உங்கள் இ-ஆதார் விபரங்களை, புதிய ஆதார் அட்டையாக வாங்க வேண்டுமென்றால் ரூ. 30 கட்டணம் செலுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
ஆதார் பயனர்களுக்கு ஆதார் சேவை பற்றிய புரிதலை வழங்க UIDAI வழக்கம் போல சில தெளிவான தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஆதார் அட்டை விபரங்களை மாற்றம் செய்ய, பொதுமக்கள் என்னென்ன ஆவங்ஙளை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற விபரங்களை ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன் படி, உங்களிடம் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ், பான் அட்டை, ரேசன் அட்டை போன்ற அடையாள ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.
No comments:
Post a Comment