Monday 15 April 2024

 நிழல் இல்லாத நாள் - நேரடியாக பார்த்து ரசித்த மாணவர்கள்

தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்ட பெற்றோர்கள் 

 










தேவகோட்டை - சிவகங்கை மாவட்டத்தில்   நாம் திறந்த வெளியில் நின்றால், சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே தெரிந்தது. பக்கத்தில் நிழலாக தெரியாததை மாணவர்கள்,பொதுமக்கள்  ஆச்சரியத்துடன் பார்த்தனர். விடுமுறை  காலமாக இருப்பதால் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நிழல் இல்லாத நாள் தொடர்பான அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

                              நிழல் இல்லாத நாள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்து மீனாள் ,முத்துலெட்சுமி  ஆகியோர்  மாணவர்களுக்கு அறிவியல் உண்மைகளை பள்ளி நாள்களில் விளக்கி கூறினார்கள்.

                  இதனை கருத்தில் கொண்டு  மாணவிகள் கனிஸ்கா, ரித்திகா,நந்தனா,முகல்யா  ஆகியோர் தங்கள் வீடுகளின் அருகில் நிழல் இல்லாத நாளை உருளை வடிவ பொருளை வைத்து செய்து பார்த்தனர்.தங்களின் பெற்றோர்களுக்கும்,பொதுமக்களுக்கும் இதனை செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

 

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நிழல் இல்லாத நாளை தங்களின் வீடுகளில் இருந்து உருளை வடிவ பொருளை கொண்டு செய்து பார்த்தனர். பொதுமக்களுக்கும் இது தொடர்பான அறிவியல் உண்மைகளை விளக்கினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துமீனாள், முத்துலெட்சுமி , ஸ்ரீதர், ஆகியோர் பள்ளியில் மாணவர்களுக்கு நிழல் இல்லாத நாள் குறித்து விளக்கி கூறினார்கள்.

 

பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் - வீடியோ 

https://www.youtube.com/watch?v=vA-YF9-edJk

https://www.youtube.com/watch?v=7UU_7DKF1oU

https://www.youtube.com/watch?v=_9xEOS_k6Bo




No comments:

Post a Comment