Wednesday, 10 April 2024

 தேவகோட்டை  நடுநிலைப்  பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா 








தேவகோட்டை ​ ​ - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக நடை பெற்றது.
                             

                   விழாவின் தொடக்கமாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் வரிசைப்படி நின்றனர்.அவர்கள் முன்பாக ஏழாம்  வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருந்தனர்.ஆசிரியை முத்துமீனாள்  அனைவரையும் வரவேற்றார்.மாணவிகளின்   அபிராமி அந்தாதி,திருக்குறள் நடனம் நடைபெற்றது. மாணவியர் கல்வி கடவுள் சரஸ்வதியை வணங்க  பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்ற அதனை தொடர்ச்சியாக எட்டாம்  வகுப்பு மாணவர்கள் அனைவரும்  கையில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றினர்.எட்டாம்  வகுப்பு மாணவி தனலெட்சுமி     உறுதி மொழி வாசிக்க எட்டாம்  வகுப்பு அணைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.அதன் பிறகு தீப  ஒளியை  ஏழாம்  வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தி கொடுக்க அவர்கள் தீபத்தை வாங்கி கொண்டனர்.அடுத்த வகுப்பு மாணவர்கள் சார்பில்  மாணவி கனிஸ்கா ஏற்புரை வழங்கினார்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர்     நன்றி கூறினார்.விழாவில் மாணவ,மாணவியரின் நாடகம்,திருக்குறள் நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.விழாவில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு மாணவ ,மாணவியர் பிரியா விடை பெறும் விழாவில்  ஒளி ஏற்றி 7ம் வகுப்பு மாணவ ,மாணவிகளிடம் வழங்கினார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
 
 
 வீடியோ :
 
 https://www.youtube.com/watch?v=GPZi68G78dg
 
 https://www.youtube.com/watch?v=Sev5r4gUplw
 
 
 
 

No comments:

Post a Comment