Saturday 20 March 2021

 வீதி நாடகம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் 








 என் வாக்கு -  என் உரிமை - என் வாக்கு விற்பனைக்கு அல்ல - பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

நடனம்,நாடகம்,பாடல்,கலந்துரையாடல்,பேச்சு மூலம் பொது மக்கள் வசிக்கும் வீதிகளில் சென்று 100 சதவிகிதம் வாக்களிக்க தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த  மாணவர்கள் 

தேவகோட்டை - தேவகோட்டை நடராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் 100 சதவிகித வாக்கு பதிவை வலியுறுத்தி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

 

              ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், மண்டல துணை வட்டாட்சியர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை வட்டாட்சியர் ராஜரெத்தினம் தலைமை தாங்கி தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக பேசினார்.  மாணவர் ஜோயல் ரொனால்ட்  ஓட்டுக்கு பணம் கொடுத்த தூக்கிப் போடுங்க என்கிற  விழிப்புணர்வு பாடலை பாடி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்."பணத்திற்காக நீயும்தானே ஓட்டளிக்காதே,நீயும் வித்துப்புட்டு பிறகுதானே தெருவில் நிற்காதே" என்று வரும் பாடல் வரிகளுடன் விலையில்லா ஓட்டுரிமையை நீங்கள்  விற்காதீர் என்கிற தேர்தல் விழிப்புணர்வு பாடலை மாணவிகள்  மெர்சி, தேவதர்ஷினி ஆகியோர் ராகத்துடன் பாடினார்கள்.நாடகம் வாயிலாக , நாங்கள் ஓட்டை நோட்டுக்கு போடமாட்டோம் , நாட்டு நன்மைக்குத்தான் போடுவோம் என்பதை வெளிப்படுத்தி ,உங்கள் விரலின் மை எல்லாக்கரையையும் போக்கட்டும் என்றும்,வாக்கை விற்பனை செய்தவரின் அவல நிலையை விளக்கும் வகையில் இரண்டு நாடகங்களை மாணவர்கள் நதியா,கன்னிகா,கனிஷ்கா,ஈஸ்வரன்,கீர்த்தியா, முத்தய்யன்,நந்தனா  ஆகியோர் நடித்து காண்பித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.வாக்குரிமை என்பது நமது வாழ்க்கையின் அடிப்படை உரிமை என்பதை நாம் மறந்து விடாமல் இருக்க அழகான கவிதையை கூறி அசத்தினார் மாணவர்  யோகேஸ்வரன் .பாடல் மூலம் தேர்தல் விழிப்புணர்வை மாணவி ஓவியா விளக்கினார். ஆசிரியைகள் செல்வமீனாள் , முத்துமீனாள் ,ஸ்ரீதர்  ஆகியோர் மாணவர்களின் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.வருவாய் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்  அய்யனார், வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு இளநிலை உதவியாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் பங்கு கொண்டு பார்த்து ரசித்தனர்.

பட விளக்கம் : தேவகோட்டை நடராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் 100 சதவிகித வாக்கு பதிவை வலியுறுத்தி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நாடகம்,நடனம்,பாடல்,பேச்சு மூலம்   தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,தேவகோட்டை வட்டாட்சியர் ராஜரெத்தினம் தலைமையிலும் , பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், மண்டல துணை வட்டாட்சியர் அமுதா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

 கீழ்கண்ட you tube லிங்க் வழியாக சென்று மாணவர்களின் பாடல்,நாடகம் விடீயோக்களை காணலாம் 

 https://www.youtube.com/watch?v=SwraY3_YR_s

 

 https://www.youtube.com/watch?v=pgpeIakuj38

 https://www.youtube.com/watch?v=sT5ovQbwty4

 https://www.youtube.com/watch?v=zZagbSKWKL4

 

 

 

 

No comments:

Post a Comment