Sunday 28 February 2021

 

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்  வெற்றிக்கு வண்ண பலூன்கள் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு 

 விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காக பயன்படும் செயற்கை கோள்









 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காக பயன்படும் செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு, செயற்கைகோள் வடிவமைத்து மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாராட்டு தெரிவித்தனர்.     
                                                        பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி வருகிறது. அந்தவகையில், பிரேசில் நாட்டை சேர்ந்த அமசோனியா-1 என்ற செயற்கைகோள் உட்பட 19 செயற்கைகோள்களை இஸ்ரோ ஆந்திர மாநிலம்  ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது.. இந்த ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக் கோள், இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.இதில், அமசோனியா-1 செயற்கைகோள்  காடுகள் அழிப்பை கண்காணிப்பதற்கு, பிரேசில் நாட்டின் விவசாயத்தை பகுப்பாய்வு செய்யவும் உதவும். பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் 78வது ராக்கெட் ஆகும். முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 39வது ராக்கெட். இதேபோல், பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இந்த ஆண்டின் முதல் திட்டமாகும்.


              பி.எஸ்.எல்.வி-சி 51 / அமசோனியா -1 மிஷன் என்பது விண்வெளித் துறையின் கீழ் உள்ள இந்திய அரசு நிறுவனமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டுக்கான (என்.எஸ்.ஐ.எல்) முதல் பிரத்யேக பி.எஸ்.எல்.வி வணிக பணி ஆகும் என்கிற தகவலை மாணவர்களுக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ஆகியோர் இணையம் வழியாக எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் தலைவர் சிவன் மற்றும் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவித்தனர். 

 

 
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காக பயன்படும் செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு, செயற்கைகோள் வடிவமைத்து மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.இந்த தகவலை மாணவர்களுக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள் ஆகியோர் இணையம் வழியாக எடுத்து கூறியதுடன் பாராட்டும் தெரிவித்தனர்.




                           

No comments:

Post a Comment