Tuesday 13 October 2020

 ஆளுமைகளுடனான அனுபவங்கள் 

                         காகிதகங்கள் கொண்டு கவிதை எழுதுவது ஒரு கலை என்றால் காகிதங்களையே கவிதையாக மாற்றுவதும் கலைதான்.அதன் பெயர் ஓரிகாமி .

                   காகிதங்களை அழகுற வித விதமாக மடித்து கொக்கு,கிளி,பூங்கொத்து ,பந்து,கட்டடம் எனப் பற்பல உருவகங்களை உருவாக்கும் கலைக்கு ஓரிகாமி என்று பெயர்.

                         ஓரிகாமி பயிற்சியாளர் சேகர் அவர்களுடனான அனுபவங்கள் மறக்க முடியாதது. 

     ஓரிகாமி  பயிற்சியாளர் தியாக சேகர் அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பிறகு பள்ளி தொடர்பாக பாராட்டி எழுதிய வரிகள் 

               
                                சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு என்று காகிதங்களை பயிற்சிக்கு வந்தேன் . மனதிற்கு மகிழ்ச்சி. அருமையான சூழல். சிறப்பான மதிய உணவு .ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அருமை. 

                   இன்று ஜப்பானிய ஓரிகாமி காகிதம் படிப்புகளை மாணவர்களிடையே பயிற்றுவித்து மனதிற்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. கலகலப்பான மாணவர்கள். நன்றாக ஒத்துழைப்பு அளித்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர். அன்பு அருமை. குறிப்பாக மாணவர்களிடம் மேடை பயம் இல்லை. இது புது அனுபவம். இது சார்ந்து ஆசிரியர்களின் மெனக்கெடல் எத்தகையது என்பதை உணரமுடிகிறது. மனதிற்கு மகிழ்ச்சி .

                    

                                       மதிய உணவை சாப்பிட்டு விட்டு .                                எளிய ருசியான கீரை சாதம் .அருமையாக இருந்தது.மனதிற்கு மகிழ்ச்சி.

அன்புடன் தியாக சேகர்

 




சில மணி நேர பயணத்துக்கு பிறகு பள்ளிக்கு வந்த பயிற்சியாளர் :

                                      சில நண்பர்களின் தகவலின்படி ஓரிகாமி பயிற்சி அளித்து வரும் தியாக சேகர் அவர்களை 2018 ஆம் ஆண்டு தொடர்பு கொண்டேன். தொடர்பு கொண்டபோது ஒரு நாள் உங்கள் பள்ளிக்கு வருகிறேன் என்று தெரிவித்தார். தஞ்சாவூர் அருகில் உள்ள கபிஸ்தலம் என்கிற ஊரில் இருந்து வரவேண்டும் என்கிற தகவலையும் என்னிடம் தெரிவித்தார். பிறகு நீண்ட முயற்சிகளுக்கு பிறகு ஒருநாள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார். 11:00 மணி ஆகிவிட்டது .அவர்கள் ஊரில் இருந்து காலை நாலு மணி, நாலரை மணிக்கு கிளம்பி அவர் எங்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளார். சில மணி நேரங்கள் பயணம் செய்து எங்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் வருகை தந்து மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை ஓரிகாமி தொடர்பாக பயிற்சி அளித்தார் .

 

பேசும் காக்கா,பறக்கும் கொக்கு செய்து அசத்திய மாணவர்கள்

 

                   பயிற்சி அளித்த போது மிகவும் ஆர்வமுடன் மாணவர்கள் முதலில் கற்றுக் கொண்டனர்.காகிதங்களை கொண்டு பூவாகவும்,தலையில் மாட்டிக்கொள்ளும் ஐந்து விதமான குல்லாக்களையும்,கழுத்தில் மாட்டி கொள்ளும் மாலைகளையும்,பறக்கும் கொக்கு,கிளி,பந்து ,பேசும் காகம்,கப்பல்,நட்சித்திர பெட்டி ,காகித காத்தாடி போன்றவற்றையும் செய்து காண்பித்தார்.மாணவர்கள் தானாகவே செய்யும் வகையில் பயிற்சி அளித்து செய்து காண்பிக்க வைத்தார்.பயிற்சியில் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.மாணவர்களுக்கு இப்பயிற்சி வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு என்றே சொல்லலாம். தியாக  சேகர் அவர்கள் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கூட இதன் மூலம் பயிற்சி அளித்தார். பிறகு மீண்டும் ஒருமுறை 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். முதல் முறை வரும்போதும் இரண்டாம் முறை வரும்பொழுதும் தியாக  சேகர் அவர்கள் மாணவர்களுடன் மாணவர்களாக அமர்ந்து மதிய சத்துணவை சாப்பிட்டு  பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்வு மிகவும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும் . சாப்பிட்டவுடன்  சாப்பாடை பற்றி மிக அழகான வரிகளில் எழுதி உள்ளது பாராட்டுக்குரியது. அதனை எங்கள் பள்ளி சத்துணவு நோட்டிலும் பதிவு செய்து சென்றார்கள்.

  தியாக சேகர் அவர்களுடனான அனுபவமும் வியக்கத்தக்கது. பல்வேறு முயற்சிகள் எடுத்து பல ஊர்களுக்கும் சென்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓரிகாமி கற்றுக் கொடுப்பதில் ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றார்கள்.

தன்னலம் பார்க்காமல் சொற்ப வருமானத்தில் இளைய சமுதாயம்  உருவாக உதவி வரும் ஓரிகாமி கலைஞர் :

                        மாணவர்களுக்கு ஒரு புதிய கலையை கற்றுக் கொடுக்கும் ஆர்வமுடைய தியாக சேகர் என்ற இளைஞருக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்து அவருடனான பயணங்கள் இன்னும் அதிக மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

நன்றிகள் பல :

                         எங்கள் பள்ளிக்கு ஆர்வமுடன் வந்து மாணவர்களுக்கு ஓரிகாமி கலையை கற்றுக் கொடுத்த  சேகர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 நன்றி கலந்த அன்புடன் 

லெ . சொக்கலிங்கம்,

 தலைமை ஆசிரியர்,

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ,

தேவகோட்டை.

 சிவகங்கை மாவட்டம்.

8056240653


ஓரிகாமி பயிற்சியாளர் தியாக சேகர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன்,ஆசிரியர்களுடன்  கலந்துரையாடல் செய்த தகவலை பள்ளி வலைதளத்தில் காணலாம் :

https://kalviyeselvam.blogspot.com/2019/07/blog-post_20.html#more

https://kalviyeselvam.blogspot.com/2018/03/blog-post_9.html#more

ஓரிகாமி பயிற்சியாளர் தியாக சேகர் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன்,ஆசிரியர்களுடன்  கலந்துரையாடல் செய்த தகவலை வீடியோவாக  காணலாம் :


https://www.youtube.com/watch?v=kA7v29phFX0&t=23s

https://www.youtube.com/watch?v=Rzl6PqYBMPg

https://www.youtube.com/watch?v=qDSth42cZbU

https://www.youtube.com/watch?v=wCWWDl-OG1g

https://www.youtube.com/watch?v=INOH2PI-soA





No comments:

Post a Comment