Saturday 25 April 2020

ஆளுமைகளுடனான அனுபவம் 

தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாகி  ஜெர்மன்  சுபாஷினி அவர்களுடனான பள்ளி பகிர்வுகள் 






தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாகி  ஜெர்மன்  சுபாஷினி  அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து முதல் முறை மாணவர்களுடன் கலந்துரையாடிய பிறகு பள்ளியை பற்றி பாராட்டி எழுதிய வரிகள்:


பள்ளி மாணவர்களின் பள்ளி மாணவர்களின் ஆர்வமும் ஊக்கமும் கண்டு மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்தேன் எனது உரையை கேட்டு அதனை கிரகித்துக் கொண்டு பொருள் மாறாத வகையில் இந்த மாணவர்கள் கேள்வி கேட்டது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது . இந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எனது நல் வாழ்த்துக்களும்,  பாராட்டுக்களும்.

முனைவர் . கே சுபாஷினி,
 ஜெர்மனி.

ஜெர்மனி பற்றியும்,தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்பாகவும் மாணவர்களுடன் கலந்துரையாடல் :

                            சுபாஷினி மேடம் அவர்களை எனக்கு தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் அவர்களின் மூலமாகத்தான் அறிமுகம்.அன்னார் அவர்கள் கல்லூரிக்கு வந்திருந்தபோது திரு சந்திரமோகன் அவர்கள் என்னை அழைத்து உங்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாட செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.  நானும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர்களை கல்லூரிக்கு எங்கள் பள்ளிக்கு வருமாறு அழைத்திருந்தேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள் மிகவும் அன்போடு , அக்கறையோடு எங்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் நன்றாக பல்வேறு தகவல்களை கலந்துரையாடல் செய்தார்கள்.  தமிழ் மொழி தொடர்பாகவும் ,  கல்வெட்டுக்கள் தொடர்பாகவும்  பல்வேறு விதமான தகவல்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள் . மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும்  பதில் கூறினார்கள் .மாணவர்கள் அவரிடம் பேசிய பல்வேறு தகவல்களை விரிவாக உள்வாங்கி கருத்துக்களைச் சொன்ன விதம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.  அதன் தொடர்ச்சியாக எங்கள் பள்ளியை பற்றி  விஷயங்களை முகநூலிலும் மற்றும் பல இடங்களிலும் பகிர்ந்து கொண்டார்கள் . அது எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகம் அளிப்பதாக இருந்தது .அவர்களுடனான தொடர்பு தமிழ் மரபு அறக்கட்டளை என்கிற இணைய வழி தொடர்பு மூலமாகவும், முகநூல் வழியாகவும் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கின்றது. பல்வேறு விதமான தகவல்களை அவர்கள் எங்களுக்கு எடுத்து சொல்லி உள்ளார்கள். முதல் முறை வந்த பிறகு மீண்டும் இரண்டு முறை அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார்கள். அடுத்தடுத்த முறைகளில் வரும் பொழுது எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் ஜெர்மனி  பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும்,  அவர் பணி தொடர்பான தகவல்களையும் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார்கள். எங்கள் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கணினியும் கொடுத்தார்கள்.

கேள்வி கேட்கும் மாணவர்கள் - முகநூலில் பாராட்டு :

 முதல் முறை எங்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சென்ற பிறகு சுபாஷினி மேடம் அவர்கள் முகநூலில் பள்ளி குறித்து பாராட்டி எழுதிய வரிகள்:


கேள்வி கேட்டால் தவறு என சொல்லி சொல்லி வளர்த்த சூழலில் கேள்விகளே  கேட்காமல் சொன்னவற்றை சுய நிந்தனையன்றி  ஏற்றுக்கொள்ளும் குழந்தைகள் நிலை மிகப் பரிதாபமானது. அவர்கள் சிந்திக்கவே பயப்படுவார்கள். சென்ற ஆண்டு டிசம்பரில் நான் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளிக்கு சென்றிருந்தேன். அங்கு சந்தித்த மாணவர்கள் சுறுசுறுப்பானவர்கள் என்பதோடு சொன்ன தகவல்களை கவனத்துடன் கேட்டு எனது உரைக்கு ஏற்ற வகையில் கேள்விகளைக் கேட்டார்கள் . ஒருவர்  விட்டு ஒருவர் என ஆர்வத்துடன்.  இவர்களின் மேல் ஏற்பட்ட ஆர்வத்தினால் ஜெர்மனி திரும்ப முன் மீண்டும் ஒரு முறை சென்றிருந்தேன்.  இந்த ஆண்டும் இந்த மாணவர்களை சந்திக்க அரை நாள்   எனது தமிழகப் பயணத்தில் ஒதுக்கியுள்ளேன். அருமையான மாணவர்கள் அருமையான , அருமையான ஆசிரியர்கள். குறிப்பாக தலைமையாசிரியர் திரு சொக்கலிங்கம் மிக பாராட்டுதலுக்குறியவர்,  என  சுபாஷினி மேடம் அவர்கள் தனது முகநூல் பதிவில் கொடுத்துள்ளார்கள்.

மலேசிய நாட்டின் நாளிதழில் எங்கள் பள்ளி தொடர்பான செய்தி :

  எங்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி சென்ற பிறகு மலேசிய நாட்டின் நாளிதழில் புதன்கிழமை தோறும் வெளியாகும் தொடரில் பள்ளி தொடர்பாக   "மறக்க முடியாத அனுபவத்தை என்னுள் ஏற்படுத்திய நாள்" என்கிற தலைப்பில் விரிவாக எங்கள் பள்ளி தொடர்பாகவும், செயல்பாடுகள் குறித்தும் பாராட்டு தெரிவித்து   ஒரு பக்கம் வண்ணப்படங்களுடன் அண்ணார் அவர்களின் கட்டுரை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஜெர்மனியில் இருந்து வந்த பரிசு :

                      ஜெர்மன் சுபாஷினி மேடம் அவர்களின் தமிழ் மரபு அறக்கட்டளை இணையத்தின் வழியாக ஜெர்மன் நாட்டின்  யோகானந்தன் புத்ரா என்பவர் மூலமாக நேர்மை மாணவிக்கு பாராட்டு என்கிற தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து அன்னார்  அவர்கள் பல்வேறு பரிசு பொருட்களை ஜெர்மனியிலிருந்து எங்கள் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். கூலித்தொழில் பார்த்து வரும்  மாணவியின் பெற்றோர்கள் மிகுந்த மன மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள். ஜெர்மன் நாட்டின் பரிசு பொருள்களை பார்த்து நேர்மை மாணவியும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார். இந்த அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது  சுபாஷினி மேடம் அவர்களின் இணைய இணைப்பின் மூலமாக தான் நடந்தேறியது.அன்னாருக்கு மிக்க நன்றிகள்.


மாணவர்களை ஊக்கப்படுத்திய பெண் ஆளுமை :

                          இதுபோன்று வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய ஆளுமையாலும் அவர்களுடனான மாணவர்களின் சந்திப்புகளும் மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்தது. உழைப்பின் ஆளுமை என்று பெருமை உடையவர்கள் சுபாஷினி மேடம் அவர்கள். வெளிநாட்டில் வேலை பார்த்தாலும்  அவர்களுக்கு இருக்கும் ஓய்வு நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளை குறித்தும் , மரபு முறைகள் குறித்தும் அறிவதற்காக பயணம் மேற்கொள்வது என்பது மிக சாதாரணமான விஷயம் கிடையாது. அதற்கு என்று தியாக உணர்வு வேண்டும். அது போன்று தான் அவருடைய பல்வேறு பணிகளுக்கிடையில் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் மொழி தொடர்பாகவும் ,கல்வெட்டுகள் தொடர்பாகவும் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து அது தொடர்பாக பல்வேறு நண்பர்களையும் அவர்கள் பெற்று மிகப்பெரிய இணைய வழித் தொடர்பு மூலம் தமிழ் சமுதாயத்திற்கு நல்ல பணிகள் செய்து வருகின்றார், அது தொடர்பான விஷயங்களை அவர் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது இவரைப் போன்று நாமும் வரவேண்டும் , இவ்வாறெல்லாம் நமக்கு வாய்ப்புகள் இருக்கிறது என்கிற தகவலையும் மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர் . பிற்காலத்தில் மாணவர்கள் இதனை எண்ணி பார்க்கும் பொழுது அவர்களுக்கு மனதிற்குள் ஒரு பெரிய ஆர்வம் ஏற்படுகிறது. இதைத்தான் வாழ்க்கைக்கான கல்வியின் வெற்றியாக பார்க்கிறோம் என்றே கூறலாம்.                      
  
 தினமலர் நாளிதழின் நேர்காணல்   :                      
                             
                         அடுத்தடுத்த முறைகளில் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வருவது தொடர்பாக நாளிதழுக்கு இன்றைய நிகழ்ச்சிகள் அனுப்பும்போது மதுரை  தினமலர் நாளிதழ்  செய்தி ஆசிரியர் திரு. ரமேஷ் குமார் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு , சுபாஷினி மேடம் அவர்களிடம் பேட்டி எடுக்க அப்பாயின்மென்ட் நேரம் கேட்டு  சொல்லுங்கள் என்று தெரிவித்தார்கள். நானும் சுபாஷினி மேடம் அவர்களை தொடர்பு கொண்டு இது போன்ற தினமலரில் இருந்து அழைக்கின்றார்கள் , எங்கள் பள்ளிக்கு வரும் பொழுது தங்களை சந்திக்க விரும்புவதாகவும் , பேட்டி எடுப்பதாகவும் சொல்கிறார்கள் என்று தெரிவித்தேன். திரு. ரமேஷ் குமார் அவர்கள் என்னிடம் பேசும்பொழுது , சுபாஷினி அவர்கள் மதுரை வந்திருந்த பொழுது இரண்டு முறை தொடர்பு கொண்டதாகவும் , நேரமின்மையின் காரணமாக சந்திக்க  முடியாமல் போனதாகவும்,  அதனால் நீங்கள் கேட்டுச் சொல்லுங்கள் என்று என்னிடம் கூறினார்கள்.  நானும் அவர்களை தொடர்பு கொண்டு இது தொடர்பாக விபரங்களை தெரிவித்து தெரிவித்திருந்தேன். திரு ரமேஷ் குமார் அவர்களே தேவகோட்டைஎங்கள்  பள்ளிக்கு வருவதாக தெரிவித்து இருந்தார்கள் . ஆனால் அவர்களுக்கு வேறு ஒரு பணி காரணமாக திரு.எட்வின் ( லேட் ) என்கிற நிருபர் அவர்கள் வந்திருந்தார்கள்.  தினமலரில் சண்டே ஸ்பெஷல் பகுதியில் வெளியிடுவதற்காக அவரைப் பேட்டி எடுத்தார்கள் .எங்கள் பள்ளியில் நிகழ்வு நடக்கும் முன்பாக சுமார் ஒரு மணி நேரம் அவரைப் பேட்டி எடுத்து அவருடன் கலந்துரையாடி பல்வேறு தகவலைப் பெற்று சென்று  சண்டே ஸ்பெஷல் நாளிதழிலும் தகவல் வெளியானது.  எங்களிடமும் பல்வேறு தகவல்களை தினமலர் மூத்த நிருபர் திரு.எட்வின் அவர்களும் அன்பாக பகிர்ந்து கொண்டார்கள்.  

 நன்றிகள் பல :
 
              மிகப்பெரிய பெண் ஆளுமை வெளிநாட்டில் வசிப்பவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து எங்களுடன் கலந்துரையாடுவது வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத அனுபவம். இதற்கு காரணமான, அவருடைய தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த  முதல்வர் திரு.சந்திரமோகன் அவர்களுக்கும் ,  அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். சுபாஷினி மேடம் அவர்களின் மூலமாக எங்கள் பள்ளிக்கு பல்வேறு ஆளுமைகள் வருகை தந்தார்கள். குறிப்பாக இந்திய அரசின் முன்னாள் தணிக்கை அதிகாரி இன்னம்பூரான் என்கிற சௌந்தரராஜன் அவர்கள் எங்கள் பள்ளிக்கு வந்து சென்ற நிகழ்வு மறக்க முடியாத அனுபவமாகும்.அன்னாருடன் எங்கள் பள்ளிக்கு அன்புடன் வருகை தந்த தமிழ் மரபு அறக்கட்டளை நிர்வாகிகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அதிகாரி  (ஓய்வு ) திரு. காளைராஜன், காரைக்குடி எல்.ஐ.சி. அதிகாரி ( ஓய்வு ) திரு.வினைதீர்த்தான் , மணலூர் அழகு மலர் பள்ளி தாளாளர் யோகாலெட்சுமி ஆகியோருக்கும் மிக்க  நன்றிகள் பல.இந்த நிகழ்வில் இத்துனை ஆளுமைகள் எங்கள் பள்ளிக்கு வர   காரணம் சுபாஷினி மேடம்  அவர்கள் தான். அவர்களுடனான நட்பு இன்று வரை தொடர்வது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகின்றது. 

நன்றி கலந்த அன்புடன்,
 லெ.சொக்கலிங்கம்,
தலைமையாசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி ,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
8056240653 


 தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாகி  ஜெர்மன்  சுபாஷினி அவர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு வலைதளத்தில் காணலாம் :

 https://kalviyeselvam.blogspot.com/2016/12/blog-post_16.html#more


https://kalviyeselvam.blogspot.com/2016/01/blog-post_7.html#more







1 comment:

  1. வணக்கம் நலம் நலம் அறிய ஆவல் நீண்ட நாட்களாக ஓலைச்சுவடிகள் கல்வெட்டுக்கள் பழைய வரலாறுகளை தேடி இந்தியா வந்து சென்றதாக அறிகிறோம் நாங்கள் முப்பது வருடமாக பழங்கால நாணயங்கள் தபால்தலைகள் பழைய கலைப் பொருட்கள் பத்திர பதிவேடுகள் சுவடிகள் சேலம் மாவட்ட வரலாற்றை கண்டுபிடித்து சேகரிப்பு செய்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு காட்சிப்படுத்தும் நேரடியாக அழைத்துச் சென்று களப்பணியை மூலமாக வரலாற்றை தெரியப்படுத்தியும் வருகிறோம் மேலும் உடல்நிலை வயோதிகம் காரணமாக முழு பணிகளை செய்து வர முடியவில்லை மேலும் நாங்கள் சேகரித்து வைத்த பழங்கால நாணயங்கள் சுவடிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அதன் கட்டுரைகளை தினசரி நாளிதழ் மூலமாக நாட்டு மக்களுக்கு தெரியப் படுத்தி வருகிறோம் மேலும் உங்களுடைய ஆதரவும் தொடரும் எங்களுக்கு கிடைத்தால் இப்பணியை இன்னும் விசாலப்படுத்திக் நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு பதிவிடுகிறோம் எங்கள் முகவரி தோழர் சுல்தான் சேலம் பாரா மஹால் நாணய சங்க இயக்குனர் கதவு எண் 104 பார் 17a 1 சேர்மன் சடகோபன் தெரு பொன்னம்மாபேட்டை சேலம் 63 60 ஜீரோ 1 கைபேசி எண் 94 43 91 28 ஜீரோ 4 நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் இது எப்படி அனுப்புவது

    ReplyDelete