Tuesday 24 May 2016

தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில்  தேவக்கோட்டை  பள்ளி மாணவி சாதனை





                தேவக்கோட்டை- தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில்  தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி மாணவி  வெற்றி பெற்று சாதனை  படைத்தார்.தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை,உயர்நிலை ,நடுநிலைப் பள்ளிகளில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.தேர்வில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்க்கு அவர்களின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி அதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ஐநூறு ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 24 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசின் நிதியிலிருந்து மாநில அரசு செலுத்துகிறது.தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.

 தேர்வின்  முடிவுகள் வெற்றி பெற்ற பள்ளிகளின்   தலைமை ஆசிரியர்களுக்கு தெரியபடுத்தபட்டுள்ளது. 6695 மாணவர்கள் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.   தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவி தி.தனம் வெற்றி பெற்று   தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் .

         வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பரிசுகள்  வழங்கி  பாராட்டினார்.
         மாணவர்கள்  அவர் தம் பெற்றோரும் பள்ளிக்கு  வருகை தந்து காலை வழிபாட்டு கூட்டத்தில்  பாராட்டு விழாவில்   பங்கேற்றனர்.இது குறித்து வெற்றி பெற்ற மாணவி தனம் கூறுகையில் ,நான் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது.எனது  வெற்றிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள்,ஈரோடு ரயில்வே பள்ளி ஆசிரியர் துரை பாண்டியன்,பெற்றோர்கள் விடா முயற்சியே காரணம்,அவர்களுக்கு நான்  நன்றி தெரிவிக்கிறேன் .  எனது தயார் கூலி வேலை செய்து என்னையையும்,என் தம்பியையும் படிக்க வைத்தபோதும்,பள்ளியில் வழங்கிய தொடர் சிறப்பு பயிற்சியின் காரணமாகாவே நான் வெற்றி பெற்றுள்ளேன். 10ம் வகுப்பு,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் வெளியாவது போன்று 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்ததேர்வு  முடிவுகள் முக்கியமானது.

                                    

பட விளக்கம் : தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவி  தி.தனம் மாநில அளவில் நடைபெற்ற   தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் வெற்றி பெற்றார். மாணவிக்கு    தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.உடன்  வெற்றி பெற்ற மாணவியின் தாயார்  சாந்தி உள்ளார் .

2 comments: