Sunday 22 May 2016

தேசிய அளவிலான பெட்ரோலிய துறையின் போட்டிகளில் சிறந்த படைப்புக்கு பாராட்டு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற பெட்ரோலிய துறையின் கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளில் சிறப்பான இடம் பிடித்ததற்கு பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


                                                   இயற்கை வளங்களையும்,பெட்ரோல் போன்ற எண்ணெய் வளங்களையும் பாதுகாப்பது எப்படி என்கிற தலைப்பில் தேசிய அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் தனம் என்ற மாணவி சிறப்பிடம் பெற்று மத்திய அரசின் பெட்ரோலிய துறையின் சான்றிதள் பெற்றார்.பெட்ரோல் போன்ற எண்ணெய் வளங்களை சேமிப்பது எவ்வாறு என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் கண்ணதாசன் என்கிற மாணவர் சிறப்பிடம் பெற்று மத்திய அரசின் பெட்ரோலிய துறையின் சான்றிதள் பெற்றார்.ஆசிரியை முத்து மீனாள் இவர்களுக்கு பயிற்சி அளித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.இந்த போட்டிக்கான அனைத்து பதிவுகளும் இணையதளத்தின் வழியாகவே அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற பெட்ரோலிய துறையின் கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளில் சிறப்பான இடம் பிடித்ததற்கு பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment