Wednesday 11 November 2015

                    

  பகிர்தலில் மன மகிழ்வு வார விழாதொடர்ச்சி
 கற்றலில் குறைபாடு உள்ள மாணவிக்கு மற்றொரு மாணவி வீட்டிற்கே சென்று எழுத்து கற்று கொடுத்து உதவுதல் 
                  (JOY OF GIVING WEEK)
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை. 





  பகிர்தலில் மன மகிழ்வு வார விழாதொடர்ச்சி 
                 தனது  அம்மாவுக்கும் ,கற்றலில் குறைபாடுள்ள மாணவிக்கும் உதவிய 5ம் வகுப்பு மாணவி காயத்ரி தெரிவித்ததாவது : சார் சொன்ன உடன் இந்த விடுமுறையில் எனது அம்மாவுக்கு காலை எழுந்தது முதல் காய் நறுக்கி கொடுத்து,தண்ணீர் எடுத்து கொடுத்து வீட்டு வேலைகள் அனைத்திலும் உதவியாக இருந்தேன்.எனது அம்மா, என்ன மகளே , தீடீர் என இவ்வாறு வேலைகளை செய்கிறாய்? என்ன நடந்தது? என கேட்டார்.அதற்கு நான் பள்ளியில் இவ்வாறு நம்மால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்ய சொன்னார்கள்.நான் இனிமேல் உனக்கு உதவியாக அனைத்து வேலைகளிலும் இருப்பேன் என்று கூரியதாக தெரிவித்தார்.மேலும் அருமையான ஒரு செயல் செய்து உள்ளார்.பள்ளியில் படிக்கும் அடுத்த வீட்டு மாணவி கற்றலில் குறைபாடு உடையவர்.அவருக்கு தினமும் ஒரு மணி நேரம் சென்று மணலில் எழுத்துக்கள் எழுத கற்று கொடுத்துள்ளார்.குறிப்பிட்ட மனைவியின் தாயார் ,இந்நிகழ்வை பார்த்து விட்டு நான் சொல்லி கொடுக்கும்போது என் மகள் மிகவும் படிக்க சிரமபடுவாள் .ஆனால் காயத்ரி நீ சொல்லி கொடுக்கும்போது அவள் எளிதாக படிக்கிறாள்,நீயே அவளுக்கு தினமும் சொல்லி  கொடு என்று தெரிவித்தார்.நானும் தற்போது தினமும் சென்று சொல்லி கொடுக்கிறேன்.அவளும் நன்றாக எழுத்து வாசிக்கிறாள்.இதனை நான் தொடர்ந்து செய்வேன் என்று கூறினார்.இதுவும் மாணவர்களிடையே மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.மாணவி காயத்ரி செயலையும் வாழ்த்துவோமாக.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.

No comments:

Post a Comment