Sunday 8 November 2015

குக்கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்  பள்ளிக்கு அறம் செய விரும்பு திட்டத்தில் நல்ல தண்ணீர் மெசின் வழங்குதல் ( இந்த வார ஆனந்த விகடனில் இது தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது)


 

 அறம்  செய விரும்பு திட்டத்தில் உதவி கோரிய சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஒன்றியம் ( தேவகோட்டையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் )  முதல் பருவ விடுமுறையில் குக்கிரமாம்  கொடிக்குளம் கிராம  பள்ளிக்கு தூறும் மழையில் ( காரைக்குடியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் ) சென்றிருந்தேன்.விடுமுறை நாளாக இருந்த போதும் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.கற்பகம் அவர்கள் தூறும் மழையில் வந்திருந்தார்கள்.பள்ளியை நேரில் பார்வையிட்டு பிறகு அதனை பரிந்துரை செய்தேன்.

  அறம் செய விரும்பு மூலம் குக்கிராமத்தில்  அரசு நடுநிலைப்  பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் 


           ஆனந்த விகடன் - ராகவா லாரன்ஸ் ஆகியோரின் அறம் செய விரும்பு திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் உள்ள சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொடிக்குளம் எனும் குக்கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கினோம்.இதனில் சுவாரசியமான நிகழ்வு என்னவெனில் இதனை பொருத்திய நண்பர் திரு.கருப்புசாமி இரவு சுமார் 8 மணி அளவில் அப்பள்ளி தலைமை ஆசிரியை அவர்களின் கணவர் வாகனத்தை  தேவகோட்டையில் இருந்து வாங்கி கொண்டு தேவகோட்டையில் இருந்து கிளம்பி இரவு சுமார் 9 மணிக்கு சென்று பள்ளியில் அதனை பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.தீடிரென ஒரு பொருள் தேவை படவே அருகில் உள்ள ஏம்பல் என்கிற ஊருக்கு சென்று (கொடிக்குளம் ஊர் மக்கள் உதவியுடன் ) அங்கு பூட்டி இருந்த கடையை தட்டி திறக்க சொல்லி பிறகு அந்த பொருளை பெற்று வேலையை முடித்து உள்ளார்.அந்த ஊர் மக்கள் நல்ல  முறையில் உதவி உள்ளனர்.மீண்டும் இரவு 10.30 மணிக்கு கிளம்பி 11.45க்கு வாகனத்தை தேவகோட்டையில் திரும்ப கொடுத்து உள்ளார்.அந்த ஊருக்கு சாதரணமாக செல்வதே சிரமமான செயல் .இது குறித்து திரு.கருப்புசாமி கூறுகையில், நான் சென்னையில் இருந்து வந்து வேறு பள்ளிக்கு பொருத்தி விட்டு இந்த ஊருக்கு வந்த போது ரோடு நன்றாக இருக்கும் ,எளிதில் சென்று விடலாம் என எண்ணினேன்.ஆனால் ரோடு நன்றாக இருந்தது.ஆனால் வழியில் யாருமே இல்லை.ஒரு இடத்தில வாகனத்தின் முகப்பு விளக்கை அணைத்து விட்டு என்னை சுற்றி பார்த்தேன்.முழுவதும் கும் இருட்டு.கொஞ்ச நேரம் என்ன செய்வது என்றே தெரியவில்லை.மீண்டும் கிளம்பி ஊரை சென்று அடைந்தேன்.ஊர் மக்கள் அருமையாக எனக்கு உதவி செய்தார்கள்.தலைமை ஆசிரியர் நல்ல முறையில் பள்ளியை நடுத்துவதாக தெரிவித்தார்கள்.இந்த ஊர் மிக நீண்ட தொலைவாக இருந்தாலும் இந்த இரவு நேரத்திலும் மக்களின்  அன்பான கவனிப்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.ஆனால் இரவு நேரத்தில் கும் இருட்டில் அந்த ஊரை கண்டு பிடித்து அவரது வேலையை முடித்து உள்ளார்.இதற்கான முழு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி தலைமை ஆசிரியை அவர்களுக்கும், கண்ணங்குடி உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.அடைக்கலராஜ் அவர்களுக்கும்,விகடன் குழுமத்திற்கும் ,படபிடிப்பாளர் திரு.சாய் அவர்களுக்கும்,மோட்டார் விகடன் திரு.பாலமுருகன் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.அறம் செய்வதை விட இது போன்று தேடி விரும்பி செய்வது தான் முக்கியமானது.அதனை விகடன் குழுமம் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் மூலம் எங்களுக்கு செய்ய வாய்ப்பு கிடைத்து உள்ளது.நாங்கள் மறு நாள் சனிக்கிழமை அன்று அப்பள்ளிக்கு சென்றபோது ( அரசு விடுமுறை ) நிறைய மாணவர்களும்,தலைமை ஆசிரியை திருமதி.கற்பகம் அவர்களும் எங்களை இன் முகத்துடன் வரவேற்றனர்.தண்ணீரை குடித்து விட்டு அருமையாக இருப்பதாக சொன்னார்கள்.மாணவர்களின் முகத்தில்  அவ்வளவு சந்தோசம்.அதனை விட தங்கள் மாணவர்களுக்கு நல்ல தண்ணீர் கிடைத்து விட்டதை பார்த்து தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் மிகுந்த சந்தோசம்.அதனை கண்ட நமக்கும் சந்தோசம்.

   லெ .சொக்கலிங்கம்,
அறம் செய விரும்பு ,
தேவகோட்டை.

No comments:

Post a Comment