படிக்கப் புத்தகம் கொடுத்து பரிசும் வழங்கிய பள்ளி
புத்தகம் படிக்கும்போது எழுதியவரின் எழுத்தாற்றல், சொல்லாற்றல், சிந்தனை அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ளுங்கள்
கல்லூரி முதல்வர் அறிவுரை
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் புத்தகம் வாசித்து சிறப்பாக பின்னூட்டம் அளித்த மாணவர்களுக்கு பரிசுகளை தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் வழங்கினார்.
பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளி நூலகத்தில் இருந்து புத்தகம் படித்து சிறப்பாக பின்னூட்டம் வழங்கிய மாணவர்களுக்கு தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்த குமார் பரிசுகளை வழங்கி பேசுகையில், ,
நான் நான் ஒரு மாணவன், நான் ஒரு மனிதன் நான் ஒரு படிப்பாளி, நான் ஒரு படைப்பாளி, புத்தகம் என் நண்பன் , புத்தகத்தை வாசிப்போம்,
நல்ல கருத்துக்களை உருவாக்குவோம், நவீன சமுதாயத்தின் சிற்பியாக மாறுவேன் என்று அனைத்து மாணவர்களையும் உறுதிமொழி எடுக்க கூறினார்.
முன்பு இருந்தது அறிவு தளம், உணர்வுத் தளம், ஆன்மீகத் தளம். ஆனால் தற்போது தேவைப்படுவது உறவு தளம். 2025ல் உறவுகளைதான் அனைவரும் வேண்டுகிறார்கள்.
அறிவுப் பசியை போக்குவது கல்வி. புத்தகம் ஒரு அறிவு ஜீவி . ஒரு மனிதனின் மூளைக்குள் உள்ள தகவல்களைத்தான் நாம் புத்தகமாக படிக்கிறோம்.
ஒரு மனிதன் நடந்து செல்லும் வழியில் ,ஒரு குழந்தை அழுவதை பார்த்து கொண்டே சென்றால் அவன் வேறு மாதிரி என்று தற்பொழுது குறிப்பிடுகிறார்கள்.
பொதுவாக ஒரு குழந்தை அழும் போது, அதனை ஒரு மனிதன் பார்க்கும் பொழுது அந்த குழந்தைக்கு என்ன வேண்டும் ? ஏன் அழுகிறாய்? என்று கேட்க வேண்டும். கேட்காமல் சென்றால் அவர் மனிதனே இல்லை என்பதுதான் உண்மை.
எப்போதும் இருக்கமாக இருக்காதீர்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருங்கள். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். உடன் உள்ளவர்களை மகிழ்ச்சியாக ஆக்கிக்கொள்ளுங்கள்.
நம்மை சுற்றி நாம் நல்ல மனிதர்களையும், நல்ல நண்பர்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு புத்தகத்தை எடுத்து படித்தால் அந்தப் புத்தகத்தை எழுதியவரின் எழுத்தாற்றல், சொல்லாற்றல், சிந்தனை அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.
அந்த புத்தகம் ஒரு மாணவனுக்கு உந்துசக்தியாக உள்ளது. புத்தகம் வாசித்தால் நமக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும்.
இங்குள்ள மாணவர்கள் புத்தகம் எழுத வேண்டும். அவ்வாறு எழுதும்போது , அந்தப் புத்தகம் வெளியாவதற்கு என்னுடைய அனைத்து விதமான உதவிகளையும் செய்கிறேன்.
நீங்கள் புத்தகத்தில் படித்ததை புத்தகம் எழுதியவர் மாதிரியே உள்வாங்கி அதனை நீங்கள் கூற வேண்டும். அவற்றை யூடியூபில் பதிவேற்றம் செய்யலாம். சோசியல் மீடியாவில் அனைவரும் அதனை பார்ப்பார்கள். பகிர்வார்கள்.
மாணவர்களால் தான் ஒரு மாற்றத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்தி புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும்.
மாணவர்கள்தான் ஆற்றல் வளம், சக்தி என அனைத்துமே நீங்கள் தான். இந்த புத்தாண்டு உங்களுக்கானது.அதிகம் புத்தகம் வாசியுங்கள் .வாழ்க்கையில் முன்னேறுங்கள்..
உங்களுக்கு நல்ல ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் கிடைத்துள்ளார்கள். பள்ளியும் நல்ல முறையில் அமைந்துள்ளது.நூலக புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பை தொடர்ந்து பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் .என்று கூறினார்.
மாணவர்கள் நந்தனா,ரித்திகா,சுபிக்ஷன்,கனிஷ்கா,யோகேஸ்வரன்,அஜய்,தர்ஷினி,முகல்யா,தீபா,கவிஷா ஆகியோர் பரிசுகளை பெற்றனர். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நூலக புத்தகங்களை படித்து சிறப்பாக பின்னூட்டம் வழங்கிய மாணவர்களுக்கு தேவகோட்டை ஆனந்தா கல்லுரி முதல்வர் ஜான் வசந்த குமார் பரிசுகளை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=5B8ZEu-Aaow
https://www.youtube.com/watch?v=fJOckVvs5Zk
No comments:
Post a Comment