Friday, 10 January 2025

 பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா 










தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
  
                 பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  தலைமையில் ஆசிரியர்கள் ,சத்துணவு ஊழியர்கள்  சக்கரை  பொங்கல், சாம்பார் சாதம்  சமைத்து மாணவர்களுக்கு வழங்கினார்கள் .பொங்கல் கோலம் ,விளையாட்டு, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்விற்கான ஏற்பாடுகளை 
ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி , முத்துமீனாள்    ஆகியோர்  செய்து இருந்தார்கள் . இந்நிகழ்வில் ஏராளமான பெற்றோர்களும் பங்கேற்றனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.மாணவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று சொல்லி மகிழ்ச்சியுடன் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர். மாணவிகளுடன் மாணவர்களும் சேர்ந்து கோலம் போட்டு அசத்தினார்கள்.

 

வீடியோ : 

https://www.youtube.com/watch?v=H4A1MQaKFmY


No comments:

Post a Comment