தமிழக அரசின் கண்ணொளி திட்டத்தில் கண் பரிசோதனை
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின்
கண்ணொளி திட்டத்தில் பள்ளி
மாணவர்களுக்கு, இலவச கண் பரிசோதனை நடைபெற்றது .
தமிழக பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கண் குறைபாட்டை அறிந்து, சரி செய்யும் வகையில் தமிழக அரசு சார்பில் 'கண்ணொளி காப்போம்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியில் கல்வி பயிலும், மாணவர்களுக்கு கண்ணங்குடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் நிபுணர் மகேஸ்வரி கண் பரிசோதனை செய்தார். அரசு ஆரம்ப சுகாதர நிலைய மருந்தாளுனர்கள் கனிமொழி,சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்
மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்துமீனாள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க
வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் கண்ணொளி திட்டத்தில் பள்ளி
மாணவர்களுக்கு, இலவச கண் பரிசோதனை நடைபெற்றது .
மாணவர்களுக்கு கண்ணங்குடி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய
கண் நிபுணர் மகேஸ்வரி கண் பரிசோதனை செய்தார். அரசு ஆரம்ப
சுகாதர நிலைய மருந்தாளுனர்கள் கனிமொழி,சிவக்குமார்
ஆகியோர் உடன் இருந்தனர்.
வீடியோ : https://www.youtube.com/watch?v=3JtAFXep4Vc
No comments:
Post a Comment