Thursday, 21 November 2024

 தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான தடுப்பூசி  முகாம் 





தேவகோட்டை -தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கன தடுப்பூசி   முகாம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்   நடைபெற்றது.
                                                        தமிழக அரசால் ஐந்து வயது மற்றும் பத்து வயது முடிந்த மாணவர்களுக்கு டி .டி .மற்றும் டி.பி.டி .தடுப்பூசி  டெட்டனஸ் மற்றும் கக்குவான் இருமலை தடுக்கும் பொருட்டு  போடப்படுகிறது.முகாம்   தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.நேரடியாக பள்ளிக்கே வந்து   தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் தேவகோட்டை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேரி  அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசியை போட்டார்.முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்து இருந்தார்.ஏராளமான பெற்றோர்களும் முகாமில் பங்கேற்றனர்.

பட விளக்கம் ; தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கன தடுப்பூசி   முகாம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்   நடைபெற்றது.  தேவகோட்டை நகராட்சி 6வது வார்டு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேரி  மாணவ,மாணவியருக்கு ஊசி போட்டார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

வீடியோ 

:https://www.youtube.com/watch?v=EEbanaQsfWk


No comments:

Post a Comment