அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசித்த பள்ளி மணவர்கள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை ஆசிரியர்கள் , பள்ளி மாணவர்கள் வசித்தனர்.
மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். தமிழக அரசு உத்தரவு படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் , பள்ளி மாணவர்கள் அனைவரும் வசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள் ,முத்து லெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர் .
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் , பள்ளி மாணவர்கள் அனைவரும் வசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துமீனாள் ,முத்து லெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர் .
வீடியோ :
No comments:
Post a Comment