ஆசிரியர் தின விழா
ஆசிரியர் என்பவர் விதை
கல்லூரி முதல்வர் பேச்சு
ஆசிரியைகளுக்கு ரோஜா பூ, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறிய மாணவர்கள்
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆசிரியை
முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ
.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் முதல்வர் ஜான் வசந்தகுமார் மாணவர்களிடம் பேசுகையில், ஆசிரியர் என்பவர் விதை . ஆசிரியர்கள் விதையாக இருந்து தொடர்ந்து வளர்ந்து, வளர்த்து கொண்டே இருப்பார்கள்.
விதைத்தவன் கூட தூங்கப் போய் விடுவான். ஆனால் விதை தூங்குவதில்லை. அதுபோன்று ஆசிரியர்கள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் தொடர்ந்து நற்செயல்களை ஏற்படுத்த தூங்காமல் தொடர்ந்து விதைத்து கொண்டும், செயல்படுத்திக் கொண்டும் இருப்பார்கள்.
உங்களது தாயும், தந்தையும் உங்களுக்கு முதல் ஆசிரியர்கள். அவர்கள்தான் பள்ளியில் உங்களை ஒப்படைக்கின்றனர்.
கடலுக்கு எப்படி எல்லை இல்லையோ அது போன்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு எல்லை இல்லாதது .ஆசிரியர்கள் எப்பொழுதுமே மாணவர்களின் நன்மையையே நினைத்துக் கொண்டு இருப்பவர்கள்.
மாணவர்களாகிய நீங்கள் தனிமையாக இருந்து விடாமல் தொடர் முயற்சி உடையவர்களாகவும், பல நபர்களுக்கு உதவி செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
ஆசிரியர்களை வாழ்வில் எப்பொழுதுமே மறக்காதீர்கள். தினந்தோறும் ஆசிரியர்களை கொண்டாடுங்கள் என்று பேசினார்.
ஆசிரியர் தினம் தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பாக ஆசிரியர் தின கவிதை கூறிய மாணவிகள் கனிஷ்கா, நந்தனா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சிறப்பான ஓவியம் வரைந்த சாதனஸ்ரீ மற்றும் சுபிக்ஷன் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் , ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்து அட்டை வழங்கியும், ரோஜா பூ கொடுத்தும் சிறப்பு செய்தனர்.
ஏராளமான மாணவ மாணவிகள் கவிதை மற்றும் ஓவியப் போட்டியில் பங்கேற்றனர் நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்
நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு தேவகோட்டை ஆனந்தா கல்லூரி முதல்வர் பரிசுகளை
வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியர் தினத்தை
முன்னிட்டு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து
தெரிவித்தனர்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=E_-NUzksDH8
No comments:
Post a Comment