Wednesday 11 September 2024

 உழைக்கத் தெரியாமல் போய்விட்டால் ஊரில் உள்ளவர்கள் அடித்து பிடிங்கி எடுத்துச் சென்றுவிடுவார்கள் 

ஒரு வாக்கியத்தில் பலநூறு தகவல்களை பதிவு செய்யும் வாழை படம் மிக அருமை 



நண்பர்களே -  சமீபத்தில் வாழை படம் பார்ப்பதற்காக திரையரங்கிற்கு சென்றிருந்தேன். நண்பர்கள் பலரும் அரசுப்பள்ளி தொடர்பான பல்வேறு தகவல்களை எடுத்துச் சொல்வதாக தெரிவித்ததன் அடிப்படையில் இந்த படத்தை பார்ப்பதற்காக போயிருந்தேன்.

                                 ஆரம்பம் முதலே கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி தொடர்பாகவும், அதில் படிக்கக்கூடிய மாணவர்களின் நிலை தொடர்பாகவும் மிக அருமையாக இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் எடுத்து சென்றிருந்தார்கள். 

                            மிகவும் ஆச்சரியமாகவும், வியக்க தக்க வகையிலும்  இந்தப் படத்தின் கதை நகர்ந்த விதம் இருந்தது. மனதிற்கு மென்மையாகவும், பல்வேறு இடங்களில் மாணவப்பருவத்தில் நண்பர்கள் எவ்வாறு பேசிக் கொள்வார்கள் என்கிற இடங்களெல்லாம் மிக நுட்பமாக, இயல்பாக இயக்குனர் எடுத்து வைத்திருந்தார்.(லெ . சொக்கலிங்கம்)

                                                 படத்தின் ஆரம்பத்தில் ரஜினி கமலுக்காக இரு நண்பர்களும் அடித்துக் கொள்வதில் ஆரம்பித்து பிறகு அவர்களுக்குள் மாணவப் பருவத்தில் ஏற்படும் நட்பு கலந்த உண்மை நிலைமையை எடுத்துக் கூறியிருந்தார்.

                                     இது உண்மை சம்பவம் என்று படத்தின் ஆரம்பத்திலேயே கொடுக்கப்பட்டிருந்தது.மாணவ  நண்பர்கள் இருவரும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டாலும், பூங்கொடி என்பதை மிக அழகாக எடுத்து கூறினார்.

                                   அந்த மாணவன் சிவனைந்தன்  பெயரே மிகவும் வித்தியாசமாக இருந்தது.  படத்தில் ஆபாசமாக, அடிதடியாக, வெட்டு குத்தாகவோ , எந்தவிதமான ஜோக் படிப்பவர்களும் இல்லாமல் அதாவது ஜோக்கிற்கு என்றே தனியாக நடிகர்  இல்லாமல் , பெயர் பெற்ற ஹீரோ, ஹீரோயின் எல்லாம் இல்லாமல் மிக இயல்பாக படத்தை கொண்டு போய் இருந்தார்கள்.

                                  அரசுப் பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர் மென்மையாக அந்த மாணவனின் உணர்வுகளை எடுத்துக்கொண்டு ,உள்வாங்கி சென்றது மிகவும் சிறப்பாக இருந்தது.(லெ . சொக்கலிங்கம்)

                                             காலில் முள் குத்தினால் வாழைத்தார் சுமக்கச் சொல்ல மாட்டார்கள் என்ற ஒரு விஷயத்திற்காக இரு நண்பர்களும் பேசிக் கொள்ளும் விதம் வீட்டில் வந்து இரண்டு மூன்று நாட்கள் எண்ணி சிரிக்க செய்தது.

                            மாணவ பருவத்தில்    இருவரில் ஒருவர் எவ்வாறு நடிக்கிறார் என்பதும், மற்றொருவர் எவ்வாறு அதனை உள்வாங்கி போகிறார் என்பதும் மிக இயல்பாக இந்தப்படத்தில் எடுத்து காட்டப்பட்டிருந்தது. 

                                  ஆருயிர் நண்பர்களாக இருந்த இருவரும் சட்டையை  பிளேடு வைத்து சட்டை கிழிக்கும் பொழுதும், இன்னும் பல்வேறு தருணங்களிலும் மிக அழகாக நடித்திருந்தார்கள்.

                                   கர்ச்சீப் எனது அக்காவதுதான் என்று சொல்லும்போது, சாட்சிக்கு சங்கரையும் அழைத்தாலும் நண்பனை விட்டு கொடுக்கக்கூடாது என்று கூறி சங்கரும் உடனே அவன் சொல்வதுதான் உண்மை என்று சொல்லிவிட்டு பின்பு நண்பனுக்கு பொறுமையாக எடுத்து சொல்வது அருமை.(லெ . சொக்கலிங்கம்)

                            மாணவப்பருவத்தில் இயல்பாக இருக்கக்கூடிய பொய் சொன்னால் சாமி குத்திவிடும்,கொன்று விடும் என்கிற தகவல்களை சங்கர் கூறும்பொழுது, சிவனைந்தன்  அதனை பெரிதாக  எடுத்துக் கொண்டாலும், இப்போது மீண்டும் ஆசிரியையிடம் கொடுத்துவிடுவோம் என்று சென்று கொண்டிருக்கும் பொழுது சிவனைந்தன் ஓடி விடுகிறார்.

                                  அந்தப் பருவத்தில் உள்ள இயல்பான வயது. அதனை தெளிவாக படத்தில் காட்டி இருந்தனர். பிறகு உண்மையை ஆசிரியரிடம் கூறும் பொழுது, அந்த ஆசிரியையும் மாணவரை அடிக்காமல் அன்பாக நடந்து கொள்ளும் விதம் அருமை..(லெ . சொக்கலிங்கம்)

                                 மாணவப்பருவத்தில் ஆண்டு விழாவில் பங்கேற்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை மிக இயல்பாக எடுத்துக் காண்பித்து இருந்தார்கள்.

                         ஆனால் அரசுப்பள்ளியில் கிராமத்தில் படிக்கும் மாணவர்கள் இது போன்ற விடுமுறை நாட்களில் வேலைக்கு செல்வதால் அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது, அவர்களுடைய கனவுகள் தகர்த்தெறியபடுகிறது என்பதை மிக இயல்பாக எடுத்துக் கூறியிருந்தார். படத்தின் இயக்குனர்.

                                  ஆரம்பம் முதலே சிவனைந்தன்  கல்வியில் மிகவும் சிறப்பான மாணவராக எடுத்துக் காண்பிக்கபட்டிருந்தார் . 

                                    விலக்கு இல்லாத வீடு சோறு, இல்லாத பானைகள், வறுமையில் இருக்கும் அம்மா, கல்யாண வயதிலிருக்கும் அக்கா என்று குடும்பம் முழுவதுமே சுற்றிச் சுற்றி வருவதாக இயல்பாக இருந்தது படத்தின் காட்சிகள்.(லெ . சொக்கலிங்கம்)

                                                ஒரு கட்சியின் செயல்பாட்டை மிக இயல்பாக அவர்களது அம்மா எடுத்துக் கூறியிருப்பார். உங்க அப்பா விட்டுப் போன பிறகு இந்த கையில் இருக்கும் பச்சை குத்தியதை காண்பித்து இதனோடு தான் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறுவார்.

                                    மேலும் அப்பொழுதுதான் தனது மகள் வேம்புவிடம் கூறுவார், சிவனைந்தன்  சம்பாதித்து வந்து கொடுத்து அதனை கொண்டு வாழ்க்கை நடத்துவதற்காக நான் வேலைக்குப் போகச் சொல்ல வில்லை.

                               உழைக்க தெரியாதவர்களிடம் ஊரில் உள்ளவர்கள் அடித்து பிடிங்கி விடுவார்கள் என்று இயல்பாக கூறியிருப்பார். அந்த ஒரு வாக்கியம் போதும் முழு உலகத்தையும் மிக எளிதாக அடையாளம் காண வைத்து விடும்.(லெ . சொக்கலிங்கம்)

                                        ஆண்டுவிழா பயிற்சிக்காக சிவனைந்தன் செல்லும் பொழுது சங்கர் உதவி செய்யும் விதம் மிக அருமை. ஆனால் 2 நாட்களாக சிவனைந்தன் சாப்பிட முடியாமல் தட்டில் போட்ட சோறு கூட ஒரு கை எடுத்து சாப்பிட முடியாமல் இருப்பதை கண்டு தியேட்டரில்  பலரும் அழுதார்கள்.

                                 எனது பின் இருக்கையில் இருந்த சிலர் அழுது கொண்டே எழுந்திருத்து தியேட்டரை விட்டு வெளியே சென்று விட்டார்கள். அந்த அளவிற்கு வறுமையின் நிறம் சிவப்பு என்பதை மிக இயல்பாக இயக்குனர் எடுத்துக் காண்பித்திருந்தார்.

                                           உணவை முதலில் ஆசிரியை சாப்பிட அழைக்கும் பொழுது கௌரவமாக வேண்டாம் என்று கூறிவிட்டு, வாழைப்பழத்தை தேடி அலைந்து  சிவனைந்தன் வாழைப்பழத்தை எடுத்து சாப்பிடும் போது தோட்டத்து முதலாளியால்  ஏற்படும் பாதிப்பும், 

                                மீண்டும் தோட்டக்காரனிடம் தப்பித்து அம்மாவிடம் சாப்பிடும்போது வாங்கும் திட்டும்  அதன் தொடர்ச்சியாக கம்மாக்கரையில இரவு முழுவதும் கிடப்பதும், மறுநாள் மயக்கத்துடன் வந்து தோழர்கள் இறந்ததை பார்ப்பதும், 

                                                தொடர்ச்சியாக அக்கா இறந்ததை பார்ப்பதும், பிறகு வயிற்றுப் பசியின் காரணமாக சோற்றை எடுத்து ஒரு கை வாயில் வைக்கும்போது அம்மாவை பார்த்து விட்டு ஓடிச்செல்வது உண்மையிலேயே மிக இயல்பாக ஒரு கிராமத்தில் படிக்கும் மாணவரின் உண்மை வறுமை நிலையை மிக தெளிவாக மக்களுக்கு விளங்கும் வகையில் எடுத்து காண்பித்துள்ளார்  இயக்குனர்.

                                       நிறைவாக இந்தப்படத்தின் 20 பேர் இறந்ததற்கு பிறகு இதை வெளிக் கொண்டு வந்து தற்போது காட்சியாக இருப்பதில் நானும் ஒருவன் என்று அவர் கூறும் பொழுது தான் உண்மையில் உருவம் தெரிகிறது.(லெ . சொக்கலிங்கம்)

                                    மாரிசெல்வராஜ் இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் அருமை.

                              அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கருங்குளத்தில் பயிலும்  சிவனைந்தன்,சங்கர் கதாபாத்திரங்கள்  மிகமிக சூப்பராக நடித்துள்ளனர்.

                                       

                              ஒரு கட்சியின் அடையாளத்தை சிவனைந்தன் நீண்ட காலமாக தன் தந்தையின் பெட்டிக்குள் பாதுகாத்து வைத்திருந்து, தந்தையுடைய அந்த சின்னத்தை சரியான நபர் யாருக்கு கொடுக்கலாம் என்று யோசித்து, யோசித்து அலசி ஆராய்ந்து தேடி ஒருநாள் திடீரென்று கனி என்கிற கதாபாத்திரத்திடம் இயல்பாக வழங்கும் நிகழ்வும் மிகவும் அருமை. வணக்கத்திற்குரியது. வாழ்த்திற்குரியது.

                      டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் இசையில் படத்தை தியேட்டரில் சென்று பார்த்தால் தான் மிகவும் அருமையாக இருக்கும்.

                                         வறுமையின் அடையாளத்தை, சமுதாய முன்னேற்றத்திற்கு அவசியமான   தகவல்களை எளிதாக மக்களிடம் எடுத்து சொல்லும் வாழைக்கு வாழ்துக்கள் .


     தோழமையுடன் 

 லெ . சொக்கலிங்கம்,

காரைக்குடி.

  






No comments:

Post a Comment