பரிசளிப்பு விழா
கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு
சப்-கலெக்டர் பரிசுகளை வழங்கி பாராட்டுதல்
தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது .
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ ,சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் தலைமை தாங்கி கலைத் திருவிழாவில் பள்ளி அளவில் போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். பங்கேற்ற மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசினை வழங்கி சிறப்பித்தார்.
பேச்சுப்போட்டியில் ஏஞ்சல்ஜாயும், தேசபக்தி பாடல்களில் சபரிவர்ஷனும், திருக்குறள் ஒப்புவித்தல் விஜய் கண்ணனும், நாட்டுப்புறப் பாடலில் ரித்திகாவும், களிமண் பொம்மைகள் செய்தல் ஆகாஷ்குமாரும் , நிகிலும், மெல்லிசை தனிப்பாடல்களில் ஜாய் லின்சிகாவும், கதை கூறுதல் போட்டியில் செபியும், மாறுவேடப் போட்டியில் அஜிதாவும் , ஓவியம் வரைதலில் ஹம்சிகா ஜாக்குலின் முதல் பரிசினை பெற்று அசத்தினார்கள்.
ஓவியம் வரைதலில் லோகேஷும், கிராமிய நடனம் ஆடியவர்களில் சாதனாஸ்ரீ , அபர்ணா, நந்தனா,ரித்திகா,மாலினி ,கவிஷா,வள்ளியம்மை , வில்லுப்பாட்டில் ரித்திகா,சரண்குமார்,லோகேஷ்,அஜய்,நந்தனா ஆகியோருக்கும் முதல் பரிசு வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவி மஹாஸ்ரீ மாறுவேட போட்டியில் முதலிடம் பிடித்து பரிசினைப் பெற்றார். கலைத் திருவிழாவில் பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்க செய்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை முத்துலட்சுமிநன்றி கூறினார். நிகழ்வில் ஏராளமான பெற்றோர்களும் பங்கேற்றனர்.
படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவில் போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தேவகோட்டை சப்-கலெக்டர் ஆயுஸ் வெங்கட்வட்ஸ் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலட்சுமி, முத்துமீனாள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர் .
வீடியோ : https://www.youtube.com/@chokkalingamlakshmanan5676/videos
No comments:
Post a Comment