காவல் துறை சார்பாக கட்டுரை, ஓவிய போட்டிகள்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
சாலைகளில் செல்லும்போது குழுவாக செல்லாதீர்கள்
காவல் ஆய்வாளர் அறிவுரை
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காவல் துறை சார்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நகர காவல் ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். காவல் துறை சார்பாக நடைபெற்ற கட்டுரை ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் அந்தோணி செல்லதுரை பரிசுகளை வழங்கி பேசுகையில், மாணவர்கள் சாலைகளில் செல்லும் பொழுது விழிப்புணர்வுடன் செல்லவேண்டும். உங்களின் உயிர் உங்களுக்கு மிக முக்கியம். சாலைகளில் குழுவாக செல்லக்கூடாது. அப்பா, அம்மா ஆசிரியர் சொல்வதை சின்ன வயதிலேயே கேட்டு நடக்க வேண்டும். மொபைல் போனில் வரும் அனைத்து தகவல்களையும் நாம் பார்க்க கூடாது.தேவையானவற்றை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.இளம் வயதில் நன்றாக படிக்க வேண்டும். கல்வி தான் உங்களுக்கு மிகப்பெரிய சொத்தாக அமையும் என்று பேசினார். நகர் காவல் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் கலா பரிசளிப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
Read more at: https://m.dinamalar.com/detail.php?id=3456771
படவிளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காவல் துறை சார்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நகர் காவல் ஆய்வாளர் அந்தோணி செல்லதுரை தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் லெ ..சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் கலா பரிசளிப்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=ZuyGC1J_yKI
https://www.youtube.com/watch?v=pokWb-7RA-Q
No comments:
Post a Comment