Friday 1 December 2023

 ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா 

கூட்டு முயற்சியே வெற்றி தரும் 

வருவாய் கோட்டாட்சியர் பேச்சு 
















தேவகோட்டை  - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

                                ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை  தலைமை தாங்கினார் . அவர் கந்த  சஷ்டி விழாவில் சிறப்பாக  மாணவர்களுக்கு பயிற்சி அளித்த இப்பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசுகளை  வழங்கிப் பேசுகையில், கூட்டு முயற்சியே வெற்றி தரும். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு நிகழ்வை நடத்தினால்  தான் அந்த நிகழ்வு வெற்றிகரமாக அமையும். அனைத்து இடங்களுக்கும் இது பொருந்தும். ராக்கெட் செய்வதிலிருந்து நமது வீடு வரை கூட்டு முயற்சி அவசியம் வேண்டும். கல்வியே செல்வமாகும். நீங்கள் அனைவரும் கல்வியை நன்றாக கற்றுக் கொள்ளுங்கள். கல்வி ஒன்றுதான் உங்களின் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் வழி  நடத்தி  செல்லும்  என்று பேசினார். ஆசிரியர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சிலம்பம் பயிற்சி அளித்த சிலம்ப பயிற்சியாளர் ராஜாவுக்கும்  பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர்களும் நிகழ்வில் பங்குகொண்டு  ஆசிரியர்களின் முயற்சிகளை பாராட்டி பேசினார்கள்.


படவிளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி  தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை  தலைமை தாங்கி ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


வீடியோ : 

https://www.youtube.com/watch?v=zElWQPxYWNU







No comments:

Post a Comment