Friday 22 December 2023

 பிஞ்சுகள் செய்த வெள்ள நிவாரணம் 

 உண்டியல் சேமிப்பை  நிவாரண பொருள் வாங்க வழங்கிய மாணவர்கள் 







 

தேவகோட்டை - தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ஜாதி, மத பேதமோ , உயர்ந்தவர்,  தாழ்ந்தவர் என்ற வித்தியாசமும் இல்லாமல் நிறைய பேர் மனமுவந்து உதவி செய்கின்றனர்.

                                             இந்த வரிசையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும்  தங்கள் பங்குக்கு   உதவிகளை அனுப்பியுள்ளனர். 

                                                    வெள்ள பாதிப்பு குறித்து, மாணவ, மாணவியரிடம் தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் உரை நிகழ்த்தினார். அதைக் கேட்ட மாணவ, மாணவியர் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை நிவாரணப் பொருள்களாக  வாங்கி அனுப்ப வலியுறுத்தினர்.

                                                இதை அடுத்து மாணவர்களிடம் பத்து ரூபாய், இருபது ரூபாய் என மாணவர்களின் உண்டியல் சேமிப்பு மூலம் கொடுத்த  500  ரூபாயுடன் ஆசிரியர்களும் இணைந்து பதினைந்து ஆயிரம் மதிப்புள்ள  நிவாரண பொருட்களை வாங்கி, தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் வசம்  கொடுத்தனர். சிவகங்கை மாவட்ட நிர்வாகம்  மூலமாக நிவாரண பொருள்கள் பயனாளர்களை சென்று அடையும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

                                                  இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் முத்துலெட்சுமி, முத்துமீனாள் , ஆசிரியர்கள்  ஸ்ரீதர், செல்வம் ஆகியோர் செய்து இருந்தனர்.

                                                    இதற்கு முன்பு சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்களும்,கேரள வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாயும் ,பேரனின் நோய் காக்க கஷ்டப்பட்ட பாட்டிக்கு  பள்ளி மாணவர்களின் ஈரமான உதவியாக 6000 ரூபாயும் அனுப்பப்பட்டு சமுதாய உதவி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் வகையில் 11 அரிசி மூடைகளை அனுப்பியது  இப்பள்ளி மாணவர்களால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தாங்கள் சேர்த்த  உண்டியல் பணம் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் பதினைந்தாயிரம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருள்களை தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார்  வசம் ஒப்படைத்தனர். 


வீடியோ :  https://www.youtube.com/watch?v=4aEfOiKgBS4






No comments:

Post a Comment