Wednesday 5 July 2023

 விவேகானந்தர் பொன்மொழி - போட்டிகள்

 வாசகங்கள்,ஓவியங்கள் வாயிலாக விவேகானந்தரை நினைவு கூர்ந்த மாணவர்கள் 


அஞ்சாதே! அஞ்சாதே ! பொன் மொழியினை மழலை மொழியில்  கூறி அசத்திய இளம் வயது மாணவி 









தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு   விவேகானந்தர் நினைவு   தினத்தை முன்னிட்டு ஓவியம் மற்றும் பொன்மொழிகள்  கூறும் போட்டிகள்  நடைபெற்றது.
 
            விவேகானந்தர் நினைவு தினத்தை முன்னிட்டு போட்டிகள் பள்ளியில் நடத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர்கள் அமலா,கௌசல்யா ஆகியோர் புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.
                                   மாணவர்கள் விவேகானந்தரின் பொன்மொழிகளை ஆர்வத்துடன் கூறியதுடன் ஓவியங்கள் வரைந்தும்    அதிகமான அளவில் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறப்பட்டது. விவேகானந்தர் பற்றி பொதுவான தகவல்கள் கூறிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.
 
 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விவேகானந்தர் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளியில் ஓவியம் மற்றும் பொன்மொழிகள் கூறுதல் போட்டிகள் நடைபெற்றது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர்கள் அமலா, கௌசல்யா ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.


விவேகானந்தர் பொன்மொழிகள் - வீடியோ 
 
 https://www.youtube.com/watch?v=j4iSAtJbuV0
 
 
 https://www.youtube.com/watch?v=7AHPnvBl69I
 

No comments:

Post a Comment