Tuesday 7 March 2023

 மணிமலர்   நிகழ்ச்சி !
ரேடியோ நிகழ்ச்சி ஒலிப்பதிவு
அகில இந்திய வானொலியான 
மதுரை வானொலியில்  

தேவகோட்டை பள்ளி 

 மாணவர்கள் பங்கேற்கும்  

சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !

 





மதுரை  – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சிகள் அகில இந்திய வானொலி நிலையமான  மதுரை வானொலியில்  ஒலிபதிவு  செய்யப்பட்டது.

                      
                                                     மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில சென்றனர்.மதுரை வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தலைவர் தாராதேவி, ஒலிபரப்பு பொறுப்பாளர் வேல்முருகன்,   ஆர்.ஜெ .ஜெயப்ரியா  ஆகியோர் மாணவர்களை வரவேற்று ஒலி பதிவு அறைக்கு அழைத்து சென்றனர்.பள்ளி மாணவர்கள்  முகல்யா  திருவிடைமருதூர் பாடலையும்,ஓவியா,தாவதுர்கா ஆகியோர் தேசிய பாதுகாப்பு தினம் தொடர்பாக உரையாடலும், ஜெயஸ்ரீ, திவ்யஸ்ரீ, அனுசியா ஆகியோர் குடும்பத்தை நடத்துவதில் புத்திசாலிகள் அன்றைய பெண்களா? இன்றைய பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும் , மகாலட்சுமி உலக சிட்டுக்குருவி தினம் தொடர்பாக கவிதையும் ,அனுசுயா சர்வதேச பெண்கள் தினம் தொடர்பாக பேச்சும், பிரியங்கா, தனலட்சுமி ஆகியோர் சிந்திக்க கூடிய வகையில் விடுகதையும், கார்த்தி, அபர்ணா, ஓவியா, தர்ஷினி,, திவ்யஸ்ரீ ஜெயஸ்ரீ ஆகியோர் இயற்கையை காப்போம் நாடகத்தையும், யோகேஸ்வரன் கார்த்திக் ஆகியோர் வில்லுப்பாட்டு மூலம் சிறப்புகளையும், லட்சுமி அபிராமிஅந்தாதி கதையும் எடுத்துக் கூறினார்கள்.ஆசிரியர் கருப்பையா   மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலியான மதுரை வானொலி நிலையத்தில் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சிக்கு ஒலி பதிவுக்கு  தனி வாகனம் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியை செல்வமீனாள் தலைமையில் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.


வீடியோ :

 https://www.youtube.com/watch?v=stK9qVopG5Q

 

 

No comments:

Post a Comment