Thursday 16 March 2023

 விளையாட்டு விழா 

எண்ணம் நன்றாக இருந்தால் எல்லாம் அழகாக இருக்கும் 

கல்வி அலுவலர்  பேச்சு 









 
















































































































 தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது 

                                             ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். 

                                 வட்டார கல்வி அதிகாரி ரெ .லட்சுமிதேவி  தலைமை தாங்கி விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசும்போது, எண்ணம் நன்றாக இருந்தால் எல்லாம் அழகாக இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளை சரியான முறையில் வளர்க்க வேண்டும். விளையாட்டு என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. விளையாடுவதால் நமது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கின்றது .சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நல்ல உணவை உட்கொண்டு நல்ல உடற்பயிற்சி செய்து நன்றாக விளையாடினால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை அடையலாம். எனவே அனைவரும் நல்ல உணவை எடுத்துக்கொண்டு விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்  என்று பேசினார் . 

                                   ஓட்டப்பந்தயம்,  பொருள்களை இடம் மாற்றுதல் , தண்ணீர் பாட்டில் நிரப்புதல் ,இசை நாற்காலி போட்டி, பண்  சாப்பிடுதல் முதலிய போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.. பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

                               நிகழ்வில் ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர். போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா செய்திருந்தார் ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.

 படவிளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் லட்சுமிதேவி தலைமையில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.பள்ளி  தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா போட்டிகள் நடை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

 

 வீடியோ : 

https://www.youtube.com/watch?v=eGGuT61DvZQ

https://www.youtube.com/watch?v=sUOVPvbZv7A


No comments:

Post a Comment