Wednesday 4 October 2017

ஹிந்தி எளிதாக கற்பது எப்படி ? பயிற்சி முகாம் 

ஏழு கேள்விகள்,இரண்டு காலங்கள் ,சில இணைப்பு சொற்களை பயன்படுத்தி மொழியை எளிதாக கற்கலாம் 



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு  உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஹிந்தி எளிதாக கற்பது எப்படி என்பது தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.
                                                   முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினர் .காரைக்குடி நேஷனல் கல்லூரி தாளாளர் சையது முன்னிலை வகித்தார்.மொழி கற்பிக்கும் பயிற்சியாளர் விசுவநாதன் தம்பியண்ணா ஹிந்தி மொழி எளிதாக கற்பது எப்படி என்பது குறித்து பேசும்போது : ஒரு மொழியில் பேசுவது என்பது கேள்வி கேட்பது மற்றும் பதில் சொல்வதுதான்.பொதுவாக எந்த மொழியிலும் மொழியில் என்ன  (கியா),ஏன் (க்யோன்) ,எப்போது (கப் ),எங்கே (கஹாங்) , எத்துணை (கித்னா),எப்படி (கைஸா),யார் (கௌன்) ஆகிய ஏழு கேள்விகள் உள்ளன.ஏற்கனவே நடந்தது,இனி நடப்பது என இரண்டு காலங்கள் உள்ளன.இத்துடன் ஆனால் ,மேலும்,ஆக போன்ற சில இணைப்பு சொற்களை பயன்படுத்தி எளிதாக யாரும் பேச கற்றுக் கொள்ளலாம்.ஏழு கேள்விகள்,இரண்டு காலங்கள்,சில இணைப்பு சொற்களை பயன்படுத்த கற்றுக்கொண்டால் ஹிந்தி உட்பட அனைத்து மொழிகளையும் எளிதாக கற்று கொள்ளலாம் இவ்வாறு பேசினார்.ஒரு நாள் முழுவதும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள்,காரைக்குடி எல்.ஐ.சி .அதிகாரி மெய்யம்மை , தேவகோட்டை நிவேதிதா,லயன் மீனாட்சி சுந்தரம்,சுப்ரமணியன்,சரவணபிரியன் ,விக்னேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்து இருந்தார்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு  உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஹிந்தி எளிதாக கற்பது எப்படி என்பது தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.

No comments:

Post a Comment