Monday 27 February 2017

தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்

மூளை தொப்பி.. உணவுச் சங்கிலி.. ஊசித் துளை கேமரா.. "கம்மி" செலவில் அறிவியல் உபகரண தயாரிப்பு...!

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் உபகரணங்களை செய்வது எப்படி என்பதை விளக்கி செய்து காண்பித்தனர்.


                         விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியைகள் சாந்தி,முத்துலெட்சுமி,வாசுகி ,ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர்   மூளை தொப்பி, உணவு சங்கிலி, பார்வை நீட்டிப்பு திறன், பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், ஆழ்துளை கிணறு மாதிரி போன்ற அமைப்பு, ஊசி துளை கேமரா, பாஸ்கல் விதி போன்ற பல்வேறு அறிவியல் உபகரணங்களை நேரடியாக செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்ததுடன், மாணவர்களே செய்வதற்கும் பயிற்சி அளித்தனர்.மாணவர்கள் பிரவீணா,தனலெட்சுமி,பரத் ஆகியோர் பேப்பரில்  தவளை,பறந்து,தொப்பி ஆகியவை செய்து காண்பித்தனர்.நிறைவாக ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் உபகரணங்களை செய்வது எப்படி என்பதை விளக்கி செய்து காண்பித்தனர்.



No comments:

Post a Comment