Monday 13 February 2017

சேக்கிழார் விழாவில்  பெரியபுராணம்    பாடிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா  


      தேவகோட்டை -    தேவக்கோட்டடை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சேக்கிழார் விழாவில் பெரியபுராணம் பாடிய மாணவர்ளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.




            விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவக்கோட்டை சேக்கிழார் விழா குழு செயலாளர் பேரா .சபா .அருணாசலம் பெரியபுராணம் பாடிய  மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற  சேக்கிழார் விழாவில் பெரியபுராணம்   முற்றோதுதல் நிகழ்வில் பெரியபுராணதில் உள்ள   4286  பாடல்களையும் பாடிய சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காயத்ரி,கார்த்திகேயன்,ரஞ்சித்,தனலெட்சுமி,பார்கவி லலிதா,கண்ணதாசன்,யோகேஸ்வரன்,தனம்,ராஜலெட்சுமி,சௌமியா ஆகியோருக்கு   சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.முன்னதாக மாணவர்கள் பிரிஜித் , அனுசுயா ,சந்தியா,சங்கீதா ,ஜெனிபர் ,ஐயப்பன் ஆகியோர் அறநூல் பாடல்களை பாடினார்கள்.நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சேக்கிழார் விழாவில் பெரியபுராணம் பாடிய மாணவர்ளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில் தேவக்கோட்டை சேக்கிழார் விழா குழு செயலாளர் பேரா .சபா .அருணாசலம், பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளனர்.

No comments:

Post a Comment