Thursday 15 September 2016

 நண்பர்களே ,ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு நாள் சுற்றுலா 


                                                      ராமநாதபுரம் மாவட்டத்தில் காலை 5.45 மணிக்கு ராமநாதபுரதிலிருந்து கிளம்பி ராமேஸ்வரம் சென்றோம்.
                                            ராமேஸ்வரம் கோவில் தரிசனம் ,டி .வி.டவர்
                  அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு இந்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு இருக்கும் டி .வி.டவர் பகுதிக்கு சென்று பார்த்தோம்.
                                                      ராமர் பாதம்
                    அடுத்து ராமர் பாதம் கோவிலுக்கு சென்று கண்டு களித்தோம்.
                                       காலை உணவு
 ராமேஸ்வரத்தில் அட்சயா ஹோட்டலில் சாப்பிட்டோம்.அருமையான டிபன்.
                    அரிச்சல் முனை
அங்கிருந்து தனுசுகோடி சென்றோம்.அங்கு அரிச்சல் முனை பகுதிக்கும் சென்றோம்.அங்கு அருமையான கடல் இணையும் இடத்தை பார்த்தோம்.ஒரு பக்கம் அமைதியான கடல் பகுதி,இன்னொரு பக்கம் ஆர்ப்பரிக்கும் கடல்.இரண்டும் ஒன்றாக இணையும் இடம் .அருமையான இடம்.ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த இடத்தில் இருந்து ரசித்தோம்.
                               தனுசுகோடி பகுதி
            மீண்டும் அங்கிருந்து தனுசுகோடி சர்ச்,போஸ்ட் ஆபீஸ்,ரயில் இருந்த இடம் என அனைத்தயும் பார்த்தோம்.
                         கோதண்டராமர் கோவில்
அங்கிருந்து கோதண்டராமர் கோவிலுக்கு சென்றோம்.கடலுக்கு நடுவே அருமையான கோவில்.
                          மிதக்கும் கல்
அங்கிருந்து மிதக்கும் கல் இருக்கும் இடத்திற்கு சென்றோம்.
                     அப்துல் கலாம் நினைவிடம்
அடுத்ததாக அப்துல் கலாம் நினைவிடம் சென்றோம்.
                                               பாம்பன் பாலம்
அடுத்து பாம்பன் பலம் இடத்தை ரசித்து பார்த்தோம்.நல்ல காற்று அடித்தது.
                          குந்து கால் மண்டபம் 
அங்கிருந்து குந்து  கால் சென்றோம்.அங்கு சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சுறாமீன் ( சுமார் 13 அடி ) கரை ஒதுங்கியுள்ளதாக அழைத்து சென்றனர்.கடல் நடுவே கரை ஓரத்தில் கால்களில் அலை அடிக்க நடந்தே சென்று அந்த சுறாமீனை பார்த்து வந்தோம்.குந்து கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தரின் மண்டபத்தை பார்வையிட்டு உள்ளே தியான மண்டபத்தில் நன்றாக தியானம் செய்தோம்.
                       காட்சி மற்றும் கருத்து அருங்காட்சியகம்
அங்கு அமைக்கப்பட்டுள்ள காட்சி மற்றும் கருத்து அமைப்பகத்தில் உள்ள மீன் வகைகளையும்,மெல்லுடலிகள் போன்ற பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தையும் பார்வையிட்டோம்.நல்ல தகவல் கிடைக்கப்பெற்றது.
                        சுந்தரமுடையான் பழத்தோட்டம்,பீச்சு 
அங்கிருந்து சுந்தரமுடையான் பழத்தோட்டம் ,சுந்தரமுடையான் பீச்சுக்கு சென்று ரசித்தோம்.
                                             அரியமான் பீச்சு மற்றும் போட்டிங்
மீண்டும் அரியமான் பீச்சுக்கும் சென்று ரசித்தோம்.அங்கு போட்டிங் சென்றோம்.நடுகடலில் போட்டிங் சென்றது அருமையான அனுபவம்.மேலும் அங்கு தண்ணீர் கண்ணாடி போல் மிக தெளிவாக உள்ளது.சுத்தமாக அலை அடிக்கவில்லை.அமைதியான நதி போல் உள்ளது.சந்தோசமாக ரசித்தோம்.
                                                    மதிய உணவு
மீண்டும் கிளம்பி ecr சாலையில் உள்ள ஐஸ்வர்யா ஹோட்டலில் சாப்பிட்டோம்.
                              தேவி பட்டினம் தரிசனம்
அங்கிருந்து தேவிபட்டினம் சென்றோம்.நல்ல தரிசனம்.
ஐந்திணை பூங்கா ( மரபணு பூங்கா)
அங்கிருந்து ஐந்திணை பூங்காவை பார்த்தோம்.( மரபணு பூங்கா ).
 திருப்புல்லாணி கோவில்
அங்கிருந்து திருப்புல்லாணி கோவிலுக்கு சென்றோம்.அங்கு ராமர் புல்லில் சயனம் கொண்டிருப்பதாக சொன்னார்கள்.அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு
     உத்திரகோசமங்கை - நடராசர்
உத்திரகோசமங்கை சென்றோம்.அருமையான பெரிய கோவில்.இலந்தை மரம் ஸ்தல விருட்சம்.மேலும் மாணிக்க வாசகர் உமாமஹேஸ்வரரை கும்பிடுவது போல் காட்சி உள்ளது.
                                உப்பளம் பணிகள் பார்வையிடல் 
அனைத்தையும் பார்த்து ரசித்து விட்டு ராமநாதபுரம் வரும் வழியில் உப்பளம் எடுக்கும் பணிகளை பார்வையிட்டோம்.ஒரு நாள் சுற்றுலா இனிதே நிறைவு பெற்றது.


தனுசுகோடி- சர்ச் 


தனுசுகோடி- பீச்சு 


தனுசுகோடி- போஸ்ட் ஆபீஸ் 


தனுசுகோடி- அந்த காலத்து ரயில் நிலையம் 


தனுசுகோடி- தற்போது உள்ள ஸ்கூல் 


கருத்து விளக்க மையம் மற்றும் அருங்காட்சியகம்



No comments:

Post a Comment