Wednesday 13 April 2016

பள்ளி மாணவர்களின் நாடகம்,கும்மி நடனம்,கவிதை,ஆங்கில பேச்சு 
100 சதவிகித வாக்காளர் விழிப்புணர்வு 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக நடராஜபுரம் சின்ன மாரியம்மன் கோவில் முன்பாக 100 சதவிகித வாக்காளர் விழிப்புணர்வு வலியுறுத்தி  கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



                                      நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் ( பொறுப்பு) ஜெயபால் சிறப்புரை வழங்கி பேசுகையில் , இந்த முறை தேர்தல் ஆணையம் 100 சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.அதன் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களின் வாயிலாக விழிப்புணர்வை கலை நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகிறோம்.எனவே அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன் என்று பேசினார்.தேவகோட்டை நகராட்சி பணி ஆய்வாளர் செந்தில் குமார் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு  தாள்களை பொது மக்களிடம் வழங்கினார்.வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான உன்னை தேடி என்கிற கவிதையை 4ம் வகுப்பு ஐயப்பனும்,வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 8ம் வகுப்பு ஆகாஷ் குமார் ஆங்கிலத்திலும்,வாக்களிப்பது நமது உரிமை என்கிற தலைப்பில் காயத்திரி,சாய் புவன்,பரத்குமார்,சகா,பெரியகருப்பன்,கருப்பையா ,தினேஷ் மாணவர்கள் குழு நாடகம் நடத்தி காண்பித்தனர்.பூமியை புரட்டுவோம் என்கிற தலைப்பில் 8ம் வகுப்பு யோகேஸ்வரன் வாக்காளர் விழிப்புணர்வு கவிதையும் ,மாணவிகள் ராஜலெட்சுமி,பூபதி,காவியா ,பார்கவி லலிதா,சுருதி,சுமித்ரா,தனம் ஆகியோர் கொண்ட குழு கும்மி பாட்டு பாடி நடனம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். கலை நிகழ்ச்சிகளை காண ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் சார்பாகவும்,வாக்களிப்பது தொடர்பாகவும் பொது மக்கள் சத்யா,லெட்சுமி ஆகியோர் பேசினார்கள்.நிகழ்ச்சிகளை ஆசிரியை கலாவல்லி தொகுத்து வழங்கினார்.முன்னதாக மாணவ,மாணவியரின் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,ஆசிரியை முத்து லெட்சுமி செய்திருந்தனர்.நிறைவாக நகராட்சி தேர்தல் பிரிவு எழுத்தர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக 100 சதவிகித வாக்கு பதிவு வலியுறுத்தி நடராஜபுரம் சின்ன மாரியம்மன் கோவில் முன்பாக பொதுமக்கள் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.உடன் தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் ( பொறுப்பு) ஜெயபால் உள்ளார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக 100 சதவிகித வாக்கு பதிவு வலியுறுத்தி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றனர்.

No comments:

Post a Comment