Wednesday 6 April 2016

பெற்றோர்களிடம் சொல்லி 100 சதவிகித வாக்களிக்க செய்யுங்கள்

வட்டாட்சியர் பேச்சு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 100 சதவிகித வாக்களிப்பதர்க்கான விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டி நடை பெற்றது.






        விழாவிற்கு வந்திருந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை தேர்தல் துணை வட்டாட்சியர் சேது நம்பு ,வருவாய் ஆய்வாளர் மயில்வாகணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேவகோட்டை வட்டாட்சியர் மங்களேஸ்வரி தலைமை தாங்கி பேசுகையில் , நீங்கள் அனைவரும் உங்கள் பெற்றோரிடம்,உங்கள் வீட்டருகே உள்ள அனைவரிடமும் சொல்லி  வாக்களிக்க சொல்லுங்கள். வாக்களிக்க நீண்ட நேரம் ஆகும் என நினைத்தால் இப்போது தேர்தல் ஆணையம் புதிய நடைமுறை கொண்டுவந்துள்ளது.1950 என்ற என்னுடன் Q என்ற எழுத்தையும்,வாக்கு சாவடி என்னையும் டைப் செய்து உங்கள் மொபைல் வழியாக குறுஞ்செய்தி அனுப்பினால் உங்கள் வாக்கு சாவடியில் எத்துனையாவது ஆளாக நீங்கள் வரிசையில் உள்ளீர்கள் என்பதை சொல்லும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதனை நீங்கள் அனைவருக்கும் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்.மாற்று திறனாளிகளுக்கு தேர்தல் ஆணையமே வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை அழைத்து சென்று வாக்களிபதர்க்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது.இலவசங்கள் எதையும் வாங்காமல் அனைவரும் வாக்களிக்க நீங்கள் உங்கள் பெற்றோரிடம் வலியுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். வாக்காளர் உறுதி மொழி அனைவராலும் சொல்லபட்டது.100 சதவிகிதம் வாக்களிப்பது ,மே 16 வாக்களிக்கும் தினம்,வாக்களிப்பது நமது கடமை,என்பன போன்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களுடன் பெற்றோர்கள் சத்யா,பெரிய நாச்சி ,சூரியா ,மாணவிகள் தனம்,சௌமியா,சுருதி  ஆகியோர் ரங்கோலி கோலங்கள் வரைந்தனர்.கோலங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நாடகம்,கும்மி பாட்டு,ஆங்கில,தமிழ்  உரை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வருவாய் உதவியாளர் ரமேஷ்,கிராம நிருவாக உதவியாளர் சந்திர சேகர் ,பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 100 சதவிகித வாக்களிப்பதை வலியுறுத்தி ரங்கோலி கோலமிடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

No comments:

Post a Comment