Wednesday 4 February 2015


 "அமெரிக்க மக்களிடம்  மனித நேயம் எப்படி இருக்கிறது?" அமெரிக்க வாழ் இந்தியரிடம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி  ருசிகர கேள்வி




 
                        சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியருடன் அமெரிக்க வாழ் இந்தியரான தேவகோட்டை வள்ளியப்பன் அமெரிக்க கல்வி முறை தொடர்பாக  கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது..
                               தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளிக்கு  அமெரிக்காவில் வசிக்கும் தேவகோட்டையை சார்ந்த  வள்ளியப்பன் அமெரிக்காவில்   2 ம் வகுப்பு படிக்கும் அவரது மகன் கிருஷ்ணன் உடன் வருகை தந்து   தமிழக கல்வி முறை தொடர்பாகவும்,பள்ளிகளின் வடிவமைப்பு தொடர்பாகவும் கேட்டு கலந்துரையாடும் நேரடி  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .இப்பள்ளி மாணவ,மாணவியற்க்கு  அமெரிக்க கல்வி முறை தொடர்பாகவும் ,அமெரிக்காவில்  உள்ள பள்ளிகளின் நிலை தொடர்பாகவும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.மாணவர்கள் எவ்வாறு சுத்தமாக பள்ளியை வைத்து உள்ளனர்,பள்ளியில் என்ன,என்ன பாடம் நடத்துகின்றனர் ,அமெரிக்காவின் கல்வி முறை எவ்வாறு உள்ளது போன்றவற்றை தெளிவாக எடுத்துக்கூறினார் . 
                                  நந்தினி,ரூபா,கார்த்தி,தனம்,ரஞ்சித்,ராஜேஸ்வரி,மணிகண்டன்,பரத்,ஜெகதீஷ்,போன்ற பல மாணவ ,மாணவிகள்   அமெரிக்காவில்  பயிலும் மாணவ,மாணவியர்  படித்து முடித்து எந்த துறைக்கு வேலைக்கு செல்கின்றனர்?,அமெரிக்காவின் முதன்மை மற்றும் முக்கிய தொழில் என்ன ? "அமெரிக்க மக்களிடம்  மனித நேயம் எப்படி இருக்கிறது?" அங்கு நேரம் எப்படி கணக்கிடப்படுகிறது ? இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் எவ்வளவு நேரம் வித்தியாசம் ? அமெரிக்காவில் அரசு பள்ளிக் கூடங்கள் உண்டா ? மாணவர்களை அமெரிக்காவில் சுற்றலாவுக்கு அழைத்து செல்வார்களா? பள்ளி நேரம் என்ன? என்பன போன்ற பல்வேறு கேள்விகளை   கேட்டு  தகவல்களாக பதில்கள் பெற்றனர். அமெரிக்க மக்களிடம் மனித நேயம்   நன்றாக உள்ளது என்றார்.. கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ஸ்ரீதர் ஏற்பாடு செய்திருந்தார். அமெரிக்க வாழ் இந்தியருடன் உரையாடிய உடன் மாணவர்கள் மிகுந்த சந்தோசம் அடைந்தனர்.
                                            8ம் வகுப்பு மாணவி கிருஷ்ணவேணி நிகழ்ச்சி குறித்து பேசுகையில், அமெரிக்கா பற்றியும் ,அங்குள்ள மக்கள் பற்றியும்,பள்ளி கல்வி பற்றியும் நிறைய தகவல்கள் கிடைக்க பெற்றோம்.நாங்களும் கண்டிப்பாக பிற்காலத்தில் நன்றாக படித்து அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கு  சென்று வருவோம் என்ற உறுதிமொழியை எங்கள் பள்ளியின் சார்பாக இப்போது தெரிவித்துகொள்கிறேன் என்றார்.நிகழ்ச்சியின் நிறைவாக வள்ளியப்பன் அவர்கள் மாணவ,மாணவியர் சொந்தமாக கதை எழுதி 3 நாட்களுக்குள் கொண்டுவந்து கொடுத்தால் பரிசு தருவதாக தெரிவித்தார்.அவர் சொன்ன 3 விசயங்களை மையமாக வைத்து கதை எழுத சொன்னார்.உடன் 6 ம் வகுப்பு மாணவி பரமேஸ்வரி அழகான கதையை அவரிடம் அந்த இடத்திலேயே கூறினார்.நெகிழ்ச்சி அடைந்த வள்ளியப்பன் பரமேஸ்வரியை பாராட்டி டாலர் உள்ள  அமெரிக்க பண நோட்டு ஒன்றை பரிசாக வழங்கினார்.மாணவியின் கதை ஆர்வத்தை பாராட்டி சென்றார்.அவரது மகன் கிருஷ்ணனும் தமிழக கல்வி முறை தொடர்பாக நிறைய தகவல்களை கேள்வியாக கேட்டு பதில் பெற்று சென்றார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியருடன் அமெரிக்க வாழ் இந்தியரான தேவகோட்டை வள்ளியப்பன் அமெரிக்க கல்வி முறை தொடர்பாக மாணவ,மாணவியருடன் கலந்துரையாடினார்.

            
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்   அமெரிக்க வாழ் இந்தியரான தேவகோட்டை வள்ளியப்பன் கதை சொல்லும் போட்டியில் உடனடியாக கதை சொன்ன மாணவி பரமேஸ்வரியை பாராட்டி பரிசாக அமெரிக்க டாலர் நோட்டு வழங்கினார்.

No comments:

Post a Comment