Tuesday 10 February 2015

சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !

சுட்டி விகடன் இதழுக்கும்,சுட்டி ஸ்டார் மாணவருக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளியில் பாராட்டு

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவர் சுட்டி ஸ்டார் ஆர் .நடராஜன் படத்துடன்  கூடிய இந்த ஆண்டுக்கான காலண்டர் (சுட்டி விகடன் ) வெளியீடு மற்றும் படத்துடன் கப் பரிசளிப்பு 




  சுட்டி விகடன் சார்பில் சுட்டி ஸ்டார்களை தொடர்ந்து ஊக்கபடுத்தும் நிகழ்ச்சி சென்னையில்  நடைபெற்றது. அன்றைய நிகழ்ச்சியில் இவர்களது படத்துடன்  கூடிய இந்த ஆண்டுக்கான காலண்டர் (சுட்டி விகடன் )வெளியீடு மற்றும் படத்துடன் கப் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.மேலும் பல்வேறு கருத்தாளர்களை கொண்டு அன்றைய தினம் பயிற்சிகளும் வழங்கப்பட்டது.மாணவர் நடராஜன் சென்னையில்  சுட்டி விகடன் சார்பில்  தான் பெற்ற பயற்சி தொடர்பாக பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் காலை வழிபாட்டு கூட்டதில் விளக்கமாக எடுத்துக் கூறினார். சுட்டி விகடன் வழங்கிய படத்துடன் கூடிய இந்த ஆண்டுக்கான காலண்டர் (சுட்டி விகடன் )வெளியீடு மற்றும் தன் படத்துடன் கூடிய  கப்  ஆகியவற்றை ஆர்வமுடன் மாணவர்கள் இடத்தில் காட்டினார்.இது போன்று அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த சுட்டி விகடன் நிர்வாகத்துக்கும்,   வெற்றி பெற்ற மாணவரையும்,போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியை தி .முத்து மீனாள் அவர்களையும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்து இப்பள்ளிக்கு ஊக்கம் தந்து கொண்டிருக்கும் சுட்டி விகடன் குழுமத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சின்ன அறிமுகம்

    சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !என்கிற தலைப்பில் தமிழகம் முழுவதும்  நடைபெற்ற சுட்டி ஸ்டார் 2014-2015 போட்டியில் காரைக்குடி மையத்தில் கலந்துகொண்ட 24 போட்டியாளர்களில் 3 பேர் தேர்வாகி உள்ளனர்.அவர்களில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவர் ஆர் .நடராஜன் என்ற மாணவரும் தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சிவகங்கை மாவட்டத்தில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து இவர் ஒருவர் மட்டுமே தேர்வாகி உள்ளது பாராட்டுதலுக்கு உரியது.தமிழகம் முழுவதும் மொத்தம் 54 மாணவ,மாணவியர் தேர்வாகி உள்ளனர்.இவ்வாறு தேர்வு ஆனவர்கள் வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் சார்பாக கட்டுரைகள் எழுதலாம்.படத்துடன் இவர்கள் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் வெளியவதுடன் குறிப்பிட்ட தொகையும்  பரிசாக  கிடைக்கும்.இவர்களுக்கு சுட்டி விகடன் சார்பாக பல கட்ட பயற்சி வழங்கப்பட்டு  உள்ளது.

No comments:

Post a Comment