Thursday 28 August 2014

         பலவகை கலவை சாத திட்டம்        மாணவர்களிடம் நல்ல வரவேற்பு 



      சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சோதனை அடிப்படையில் ஒரு நாள்  தமிழக அரசின் பலவகை கலவை சாதத்துடன் ,மாசாலா சேர்ந்த முட்டை வழங்கும் திட்டம்  அறிமுகபடுத்தபட்டது .
                                தமிழக முதல்வரின் ஆணைப்படி தமிழகம் முழுவதும் விரைவில் அனைத்து மையங்களிலும்  பல வகை கலவை சாதத்துடன் ,மாசாலா சேர்ந்த முட்டை வழங்கும் திட்டம் அறிமுகபடுத்தபட உள்ளது.இதன் தொடர்ச்சியாக தேவகோட்டை பகுதியில் உள்ள சத்துணவு  மையங்களில் சோதனை அடிப்படையில் ஒரு நாள் கலவை சாதத்துடன் ,மாசாலா சேர்ந்த முட்டை வழங்கும் திட்டம் அறிமுகபடுத்தபட்டது.இதனில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலவை சாதத்துடன் மாசாலா முட்டை வழங்கப்பட்டபோது மாணவ,மாணவியர் ஆர்வத்துடன் இதனை சாப்பிட்டனர்.மாணவ,மாணவியரிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததாகவும், கலவை சாதத்துடன் ,மாசாலா சேர்ந்த முட்டை சாப்பிடுவதற்கு நன்றாக இருந்ததாகவும்  பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் தென்றல்,சமையலர் மற்றும் உதவியாளர் ஆகியோர்  கலவை சாதத்துடன் ,மாசாலா சேர்ந்த முட்டை உணவை மாணவர் ,மாணவியர்க்கு  பரிமாறினார்கள்.




                                                   

No comments:

Post a Comment