Friday, 17 May 2024

 சமுதாயத்தோடு இணைந்த கல்வி வழங்கும் பள்ளி 










தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சமுதாயத்துடன் இணைந்த கல்வியை வழங்கி வருவதற்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

                               இப்பள்ளியில் தொடர்ந்து மாணவர்களுக்கும், மாணவர்கள் மூலமாக பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலங்கள் சென்று, கோஷங்கள் எழுப்பி  பல்வேறு சமுதாயம் தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் : 

                         குறிப்பாக போதை பொருள் விழிப்புணர்வு,   போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்  என்ற தலைப்பிலான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய வீதிகளின் வழியாக, போதை பொருள் தடுப்பு  விழிப்புணர்வு கோஷங்களுடன் மாணவர்கள்   ஊர்வலமாக சென்று  காவல்துறையின் அறிவுரையோடு அனைத்து பொது மக்களுக்கும்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . 

என் குப்பை,என் பொறுப்பு ஊர்வலம் மூலம் விழிப்புணர்வு :

                                                               என் குப்பை , என் பொறுப்பு என்ற தலைப்பில் குப்பைகளை சரியான முறையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று மக்கள் பிரித்து வழங்கும் வகையிலான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

                              குப்பைகளைபிரித்து வழங்குவதால்  ஏற்படும் நன்மைகள் குறித்து  நகராட்சியின் ஆலோசனைப்படி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவர்கள் ஊர்வலமாக சென்று  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது

வெள்ள நிவாரண பொருள் வழங்கிய மாணவர்கள் : 

                                  சமீபத்தில்  திருநெல்வேலி , தூத்துக்குடி போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தை மாணவர்களுக்கு பள்ளியில் விரிவாக விளக்கி சமுதாயத்தோடு மாணவர்களும் இணைந்து வாழும் வகையில் அவர்களுக்கான வெள்ளம் தொடர்பான பாதிப்புகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . 

                            இது போன்ற முக்கியமான சூழ்நிலைகளில் மாணவர்கள் பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்து, அதன் வாயிலாக அவர்களால் முடிந்த சிறுசிறு தொகைகளை சேர்த்து , அதன்  மூலமாக பொதுமக்களுக்கு,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண பொருட்கள் மாணவர்களின் வழியாகவே வாங்கி அனுப்பப்பட்டது.

                                               இதனால் மாணவர்களுக்கு பிற்காலத்தில் சமுதாயத்தில் யாரேனும் துன்பப்பட்டால் தான் உதவி செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை இளம் வயதிலேயே மாணவர்களுக்கு ஏற்படுத்துவது  குறிப்பிடத்தக்கது.


மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஊர்வலம் : 

                               அரசு,அரசு உதவி பெறும்  பள்ளிகளில் பயிலும்  மாணவர்களுக்கு  அரசின் பல்வேறு நலத்திட்டங்கள்  வழங்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு  ஊர்வலமும்,  முக்கிய வீதிகளின் வழியாக மாணவர்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் கோஷங்கள் எழுப்பி  விழிப்புணர்வு   ஏற்படுத்தப்பட்டது


வீதி நாடகம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு : 

                            வீதி நாடகம் மூலமாக  அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், எப்படியெல்லாம் வாக்களிக்கவேண்டும், வாக்களிப்பதன்  நன்மை என்ன என்பவற்றை  மாணவர்களின் கவிதை, பேச்சு, வீதி நாடகங்களில் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,

                   இதன் மூலமாக இம்மாணவர்கள் பிற்காலத்தில் பெரியவர்களாக வரும்பொழுது நிச்சயமாக அனைவரும் வாக்களிப்பார்கள். தங்களை சுற்றி உள்ளவர்களையும் வாக்களிக்க செய்வார்கள்.  தங்களுடைய பெற்றோருக்கும், பொதுமக்களுக்கும், வீதி நாடகத்தின் மூலமாக அனைவருக்கும் வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் .


வீதிகளில் சென்று  நிழல் இல்லாத நாள் விழிப்புணர்வு ஏறப்டுத்துதல் :


                                நிழல் இல்லாத நாள் என்பது மிக முக்கியமான ஒரு அறிவியல் விழிப்புணர்வு ஆகும். இந்த அறிவியல் விழிப்புணர்வை பொதுமக்கள் அனைவரும் பயன்படும் வகையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து ஆங்காங்கே சென்று நிழல் இல்லாத  நாளை சரியான  நேரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு அது தொடர்பான அறிவியல் உண்மைகளை விளக்கி சமுதாயத்தோடு இணைந்து  விழிப்புணர்வு ஏற்படுத்திக்  வருகின்றனர் .       



புதிய முறையில் தேர்தல் விழிப்புணர்வு :

                   அஞ்சலட்டையில் மூலமாக புதிய முறையில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதாவது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களின் நண்பர்களின் பெற்றோர்களின் பெயர்களை அஞ்சல் அட்டையில்  எழுதி அவர்களுக்கு அஞ்சலட்டை மூலமாக 100% வாக்களிக்க தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

                                     அஞ்சலட்டையில் மூலமாக பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவிகிதம் வாக்களிக்க மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் இதன் மூலமாக எளிதாக தேர்தல் விழிப்புணர்வு கிடைக்கும் வகையில் ஏற்பாடு  செய்யப்பட்டது, 

                             பிற்காலத்தில் இந்த அஞ்சல் அட்டைகளை எழுதும் மாணவர்கள் நிச்சயமாக 100% வாக்களிக்க தாங்களும், தங்களை சுற்றி உள்ளவர்களையும் பெற்றோர்களையும், பொதுமக்களையும், தங்களது உறவினர்களையும் ஆவண  செய்வார்கள் என்பது உறுதி. 


பெற்றோர்கள் பாராட்டு : 

                         இதுபோன்று சமுதாயத்திற்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அதன் மூலமாக மாணவர்களுக்கு பிற்காலத்தில் சமுதாயமாக மாறும் போது தற்போதைய விழிப்புணர்வு  உதவும் வகையிலும் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகள் ஏற்படுத்த பட்டு வருவது குறித்து பெற்றோர்கள் பள்ளிக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.



                                படவிளக்கம்:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து சமுதாயத்தோடு இணைந்த கல்வியை பள்ளி வழங்கி வருவதற்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.









No comments:

Post a Comment