Monday 17 August 2020

 கேட்ட உடன் கிடைத்த இ  பாஸ் 






          இன்று காலை இ பாஸ் பெற்றது எளிதாக இருந்தது. இன்று காலை எனக்கு ( லெ .சொக்கலிங்கம்,காரைக்குடி ) நண்பரும் ,தோழருமான ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மாதவன் அவர்களுக்கு இ பாஸ் போடுவதற்காக எனது மொபைல் போன் வழியாக முயற்சி செய்தேன். சரியாக பத்து நிமிடத்தில் பாஸ் கிடைக்கப்பெற்றது. அதற்கான தகவல்கள் அனைத்தையும் சரியாக கொடுத்தவுடன் டவுன்லோட் ஆகிவிட்டது. 

ஆரம்பம் எப்படி ?

              இ  பாஸ் போடுவது   மிக எளிது. முதலாவதாக நாம் அதன் உள்ளே செல்லும் பொழுது விண்ணப்பிப்பவரின்  மொபைல் எண் கேட்கின்றது. மொபைல் எண்ணை கொடுத்து விட்டு அங்கே இருக்கக்கூடிய கேப்ட்சா எண்ணையும் பதிவு செய்தால் ஒடிபி ,பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஓ டி  பி வருகிறது. அதனை  கொடுத்த பிறகு நாம் உள்ளே செல்ல முடிகிறது. உள்ளே சென்ற பிறகு தான்கீழே உள்ள அனைத்து தகவலையும் கேட்கிறது.

என்னென்ன தகவல்கள் தயாராக வைத்திருக்க வேண்டும் ?
 
                      இ பாஸ் பெறுவதற்கு என்னவெல்லாம் தயாராக வைத்திருக்க வேண்டும்? விண்ணப்பிப்பவர்  பெயர், ஆதார் எண், வயது போன்ற தகவல்களும், கார் இருந்தால் காரின் எண்ணையும் , உடன் செல்பவர்கள் உடைய  வயது, பெயர், ஆதார் எண் முதலியவையும் வைத்திருக்க வேண்டும். கார் ஓட்டுர் தனியாக இருந்தால்,  கார் ஓட்டுனர் என்பவரை உடன் வருபவர்கள் உடைய எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  அவர்களது ஆதார் எண், முகவரி, பெயர், அவரது தந்தை பெயர்,வயது முதலிய தகவல்களையும் கையில் வைத்திருக்க வேண்டும். யார் அப்பிளிகேண்ட் ஆக  விண்ணப்பிப்பவர் தனது ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டை அப்லோட் செய்ய வேண்டும்.  இந்த தகவல்களை நாம் மிக எளிதாக அப்லோடு செய்ய ஏதுவாக கையில் தயாராக வைத்திருப்பத்துடன், போனிலும் போட்டோ எடுத்து தயாராக வைத்திருக்க வேண்டும்.விண்ணப்பிப்பவர் முகவரி,கதவு எண் ,தெரு பெயர்,ஊர்,மாவட்டம்,தாலுகா,பின்கோடு போன்றவை அவசியம் இருக்க வேண்டும்.நாம் செல்ல இருக்கும் தேதி, செல்ல கூடிய ஊர்,தாலுகா,மாவட்டம் ,செல்லும் முகவரியில் உள்ள கதவு எண் ,தெரு பெயர்,மாவட்டம் ,பின்கோடு முதலியவை அவசியம் தேவை. சரியாக ஐந்து முதல் பத்து நிமிடத்திற்குள் நான் வைத்திருக்கும் தகவல்களை கொடுத்தேன் .  இ பாஸ் நாங்கள் காரைக்குடியிலிருந்து சிவகாசிக்கு முயற்சி செய்து இருந்தோம். ஐந்து முதல் 10 நிமிடங்களில் இ  பாஸ் கிடைக்கப்பெற்றது. மொபைல் போன் வழியாக இ  பாஸ் கிடைக்கப் பெற்றது  எங்களுக்கு மகிழ்ச்சியான தகவலாக இருந்தது. தகவல் தெரிவித்து ஒத்துழைத்த 
 நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனாலும் கொரோனா காரணமாக தமிழ்நாட்டுக்குள் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்வதற்கு பாஸ் பெற்று செல்லக்கூடிய நிகழ்வு புதுமையானதாகவும்,ஆச்சிரியமானதாகவும் இருந்தது.

லெ .சொக்கலிங்கம்,
காரைக்குடி. 







No comments:

Post a Comment