Thursday 13 August 2020

சுதந்திர தின போட்டிகள் 

 மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே பங்கேற்கும் சுதந்திர தின விழா போட்டிகளை ஆன்லைன் வழியாக நடத்திய பள்ளி


ஊரடங்கு நேரத்தில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அசத்திய மாணவர்கள் 
























தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில்  சுதந்திர தினத்தை  வீட்டிலேயே ஓவியம் வரைந்தும் ,கவிதை சொல்லியும் , பேசியும் வீடியோக்களை அனுப்பி பள்ளி நடத்திய  ஆன்லைன் போட்டிகளில் ஆர்வத்துடன்  பங்கேற்றனர்.
                            சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு  ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள்   நடைபெறுவது வழக்கம். கொரோனாவால் பள்ளி  மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு  மாணவர்கள் வீட்டிலேயே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற   மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,முத்துமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர். மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு  உதவுவது ஆகும் . ஓவியம்,கவிதை,பேச்சு போட்டிகளில்   பங்கேற்ற மாணவர்கள் ராஜேஸ்வரி,சண்முகம்,புகழேந்தி,முகேஷ் ,திவ்யஸ்ரீ,முத்தய்யன் , பிரஜித்,வெங்கட்ராமன்,அட்சயா,ஆகாஷ்,ராகேஷ் ஓவியா, ஜோயல் ரொனால்ட்,ஈஸ்வரன், ஸ்வேதா,பிரிஜித்,அம்முஸ்ரீ  ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பள்ளி திறந்த பிறகு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.இப்பள்ளி மாணவர்களுக்கு  ஆன்லைன் வழியாக  பாட  வகுப்புகளும், பல்வேறு மத்திய,மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும் ,சதுரங்க பயிற்சிகள்  நடைபெற்று வருவதும்  ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள்  தெரிவித்தனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டிலேயே ஓவியம், கவிதை,பேச்சு போன்ற போட்டிகளில் பங்கு கொண்டு ஆன்லைன் மூலம் வீடியோக்களை அனுப்பினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,முத்தமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்க ஊக்குவித்தனர். 



 ஊரடங்கால்  பள்ளி  மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  சுதந்திர தினத்தை   முன்னிட்டு  வீட்டிலேயே  கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்று பேசிய வீடியோக்களை YOU TUBE யில் காணலாம் :

 https://www.youtube.com/watch?v=fI8wgzFdYNA

 https://www.youtube.com/watch?v=diSXcEZhtd0

 https://www.youtube.com/watch?v=nmUoj8X-ZGg

 https://www.youtube.com/watch?v=LWinRm6Xyz8


 https://www.youtube.com/watch?v=0quXLyLYaLk




No comments:

Post a Comment