Monday 21 November 2016

எல்.ஈ.டி., எல்.சி.டி.,என்பது என்ன ?
தொடர் இணைப்பு ,பக்க இணைப்பு எவ்வாறு செயல்படுகிறது ?

அறிவியல் நேரடி விளக்கம் மூலம் செய்து காண்பித்தல்

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.



                                      நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி   வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அகஸ்தியா அறக்கட்டளை மற்றும் அமுமு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் இந்த அறிவியல் வாகனம் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனை மூலம் சென்னையை சார்ந்த பயிற்சியாளர் கவியரசு மற்றும் திருநெல்வேலியை சார்ந்த முத்து செல்வன்  ஆகியோர் நேரடியாக மாணவர்களுக்கு செய்து காண்பித்தார்கள் .மின்னுட்டம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பலூன்கள்களை கொண்டும்,  எல்.ஈ.டி., எல்.சி.டி.,என்பது என்ன என்பது தொடர்பாகவும்,தொடர் இணைப்பு சுற்று,பக்க இணைப்பு ,எளிய மின்சுற்று,அமிலம்,காரம் ,எவ்வாறு பொருள் மின்சாரத்தை கடத்தும் ,செல் அமைப்பு ஆகியவற்றிற்கு அறிவியல் விளக்கங்களை நேரடியாக செய்து காண்பித்து தெளிவாக விளக்கம் அளித்தனர்.                         
                                 
                                                  மாணவர்கள் ரஞ்சித்,உமா மகேஸ்வரி,ராஜேஷ்,நந்தகுமார் ,காவியா,சக்தி,ஜெனிபர்,விக்னேஷ் உட்பட பலர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்  நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் வாகனம் வாயிலாக மாணவர்களுக்கு சோதனைகளை அமுமு அறக்கட்டளை   மற்றும் அகஸ்தியா அறக்கட்டளையின் பயிற்சியாளர் கவியரசு ,முத்து செல்வன் செய்து காண்பித்தார்கள் .

No comments:

Post a Comment