Monday 31 October 2016

மாநில போட்டிக்கு தேர்வு
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி  போட்டியில் வெற்றி
தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி  மாவட்ட அளவிலான அறிவியல்  கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்று மெடல்,விருதுடன் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றதற்கு பள்ளியில்  பாராட்டு விழா நடைபெற்றது.


                           விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். விழாவில் சென்னை அக்னி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்குபெற்று ஜூனியர் பிரிவில்  வெற்றி பெற்று மெடல் மற்றும் விருது ,சான்றிதல் பெற்று சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ள 6 ம் வகுப்பு மாணவி நித்திய கல்யாணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இக்கண்காட்சியில் மாணவர்கள் கார்த்திகேயன் ,ராஜேஷ்,நந்தகுமார் ,ஜெனிபர்,உமா மகேஸ்வரி ஆகியோர்  கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றனர். சுமார் 172  மாணவர்கள் சுமார் 15 பள்ளிகளில் இருந்து  பங்கேற்ற இப்போட்டிகளில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் கலந்துகொண்ட ஒரே பள்ளி இப்பள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. பங்கேற்ற பெரும்பாலான  தனியார் மேல்நிலை பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு இப்பள்ளி மாணவி வெற்றி பெற்றுள்ளார் என்பது பாராட்டப்பட வேண்டியது.ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி  மாவட்ட அளவிலான அறிவியல்  கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்று மெடல்,விருதுடன் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றதற்கு பள்ளியில்  பாராட்டு விழா நடைபெற்றது. மாணவி நித்திய கல்யாணியை பாராட்டும் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்.

No comments:

Post a Comment