Tuesday 14 July 2015

  பள்ளி அளவிலான சதுரங்க போட்டி



           தேவகோட்டை -ஜூலை-   சிவகங்கை மாவட்டம்     தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.
              தமிழகம் முழுவது மாணவ-மாணவிகளுக்கு சதுரங்க விளையாட்டுப்  போட்டிகள் வைத்துசிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தி அவர்களின்  அறிவுத்திறமையினை வெளிக்கொண்டுவர தமிழக  முதல்வர் சதுரங்க போட்டிகள் நடத்த உத்தரவிட்டிருந்தார்.
                                சிவகங்கை மாவட்டம்     தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார்.இதனில் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்கள் பிரிவில் 4ம் வகுப்பை சேர்ந்த மாணவர் சபரி முதலிடத்தையும், 5ம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன் இரண்டாம் இடத்தையும் , பெண்கள் பிரிவில் ஐந்தாம் வகுப்பு மாணவி காயத்ரி முதல் இடத்தையும் ,அதே வகுப்பை சார்ந்த மாணவி நித்திய கல்யாணி இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றிபெற்றனர்.
                                    14 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கான பிரிவில்   ஏழாம் வகுப்பு மாணவர் ஜீவா முதல் இடத்தையும் ,எட்டாம் வகுப்பை சேர்ந்த மாணவர் முனீஸ்வரன் இரண்டாம் இடத்தையும் ,பெண்களுக்கான பிரிவில் ஏழாம் வகுப்பு  மாணவி தனலெட்சுமி முதல் இடத்தையும், அதே வகுப்பை சார்ந்த பரமேஸ்வரி இரண்டாம் இடத்தையும் பிடித்து வெற்றிபெற்றனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா செய்திருந்தார்.வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு இவர்கள் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.இவர்களுக்கு பள்ளியின் நிர்வாகம்  சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

 பட விளக்கம்தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சதுரங்க போட்டிகள் நடந்தன.

No comments:

Post a Comment