Friday 27 March 2015


பெற்றோர்களிடம் கூறி பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம்
 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் உறுதி


    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாடகமாக நடைபெற்றது.

                          தமிழ்நாடு அரசு சுற்றுச்சுழல் துறை நிதி உதவியுடன் மதுரை வாய்ஸ்  தொண்டு நிறுவனம் சார்பாக பிளாஸ்டிக் பைகளின் தீங்குகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கும் கலை நிகழ்ச்சி நாடகமாக நடத்தி காண்பிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் வாய்ஸ் டிரஸ்ட்டின் திட்ட மேலாளர் தங்கபாண்டியன் வரவேற்றார்.பள்ளியின் தலைமை ஆசிரியர்
லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .கலை நிகழ்ச்சியின் தொடக்கமாக பறை ஆட்ட நடனம் மற்றும் பாடல் மூலம் சுற்றுச் சுழல் பாதுகாப்பு தொடர்பாக விளக்கப்பட்டது.பின்பு கலைக்குழுவினர் நாடகம் மூலம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் வரும் தீமைகள் , பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருக்க வழிமுறைகள் ,பிளாஸ்டிக்கை மறுப்போம்,குறைப்போம்.மறு பயன்பாடு செய்வோம்,மறுசுழற்சி செய்வோம்,மீட்டெடுப்போம் என்பது தொடர்பான கருத்துக்களை வலியுறுத்தி நடித்து காண்பித்தனர்.நாடகத்தை மாணவ,மாணவியர் ஆர்வமுடன் கை தட்டி சந்தோசமாக கண்டுகளித்தனர்.பிளாஸ்டிக்கை ஒழிப்போம்,சுற்றுச் சுழலை காப்போம் என்பது தொடர்பான உறுதி மொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.நிகழ்ச்சி குறித்து மணிகண்டன்,காயத்ரி,பாக்கிய லெட்சுமி ,கீர்த்தியா,சந்தியா,பரமேஸ்வரி,சொர்ணம்பிகா உட்பட பல மாணவ,மாணவியர் பெற்றோர்களிடம் கூறி பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் என உறுதியுடன்  தங்களது கருத்துக்களை கூறினர்.நிறைவாக ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மதுரை வாய்ஸ்  தொண்டு நிறுவனம் சார்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நாடகமாக நடத்தி காண்பிக்கப்பட்டது

No comments:

Post a Comment