Saturday 14 March 2015


 பழத்தை சுத்தியலாக மாற்றும் நிகழ்ச்சி 
அறிவியல் பணிமனையில் ருசிகரம்


 
               சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியலை விளையாட்டாக கற்று கொள்வது தொடர்பான நேரடியாக செய்து காட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
                        நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தங்கினார்.மாணவி சொர்ணம்பிகா வரவேற்றார்.சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் மாணவர் நடராஜன் ,சமயபுரத்தாள் அறிவியல் விழிப்புணர்வு  தொடர்பாக பேசினார்கள். தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் -திருச்சி அண்ணா கோளரங்கத்தின் திட்ட இயக்குனர் லெனின் தமிழ் கோவன் மற்றும் பொறியாளர் அகிலன் அறிவியலை நேரடியாக செய்து காண்பித்தலில் முதல் சோதனையாக புவி ஈர்ப்பு விசை அனைவருக்கும் அனைத்து பொருளுக்கும் சமம் என்பதை நோட்டு மற்றும் பேப்பரை வைத்தும் ,அழுத்தம் பரவலாக இருப்பது தொடர்பாக பேப்பர் கப் 10 சமம் ஆக வைத்து அதன் மேல் எழுதும் அட்டையை வைத்து மாணவனை அதனில் ஏறி நிற்க சொல்லி விளக்கியும்,திரவம் விரிவடைய முடியாது என்பதை தண்ணீர் பாக்கெட்டை பென்சில் மூலம் குத்தி அதில் உள்ள ஓட்டையின் வழியாக தண்ணீர் வெளியே செல்லாமல் இருப்பதை கொண்டு எடுத்து கூறியும் ,ஒலி அலைகள் காற்றின் அதிர்வுகள் மூலம் பரவுகிறது என்பதை பறவை விசில் மூலமும்,வெற்றிடத்தை நிரப்புவதற்காக வளிமண்டல அழுத்தம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முட்டை குடுவைக்குள் எவ்வாறு உள்ளே செல்கிறது என்பது மூலமும் ,பெர்னௌலி தத்துவம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெறும் பையை கொண்டு அதனுள் காற்று ஊத சொல்லி எளிமையாக விளக்கியும்,காற்று தம்பம் அதிர்வு மாறுவதால்  ஒலி  வித்தியாசபடுதல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ட்ரம்பெட் போன்ற இசைக்கருவிகள் மூலமாகவும்,திரவ நைட்ரஜன் பயன்படுத்தி பொருள்களின் இயற்பியல் குணங்களை  மாற்றுதல் தொடர்பான  உடனடி ஐஸ் செய்தல்,பழத்தை கொண்டு சுத்தியலாக மாற்றி ஆணி அடிப்பது,சாதாரண குழாயை புகை வரும் குழையாக மாற்றி காண்பிப்பது என பல்வேறு நிகழ்வுகளை நேராடியாக செய்து காண்பித்தனர். பரமேஸ்வரி ,நடராஜன்,சொர்ணம்பிகா,ராஜேஸ்வரி ,தனலெட்சுமி ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிகழ்ச்சியினை ஆசிரியை முத்து மீனாள் தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியில் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய  பல் மருத்துவர் சண்முக பிரியா உட்பட ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் நிறைவாக மாணவர்  ஆகாஷ் நன்றி கூறினார்.

பட விளக்கம்:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் -திருச்சி அண்ணா கோளரங்கத்தின் திட்ட இயக்குனர் லெனின் தமிழ் கோவன் மற்றும் பொறியாளர் அகிலன் அறிவியலை விளையாட்டாக கற்று கொள்வது தொடர்பான  செயல்களை நேரடியாக செய்து காண்பித்தனர்.
                      

No comments:

Post a Comment