Thursday 11 December 2014


            கணிதப் போட்டித் தேர்வு: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி ) மாணவ,மாணவியர் பங்கேற்பு 





                தமிழ்நாடு அறிவியல் மையத்தின் சார்பில் மாணவர்களுக்கான கணித் திறன் போட்டியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி ) மாணவ,மாணவியர் பங்கேற்பு

                  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி ) மாணவ,மாணவியர் திருச்சியில் பள்ளி மாணவர்களின் கணிதத் திறமையை கண்டறியும் வகையில் தமிழ்நாடு அறிவியல் மையத்தின் சார்பில் மாணவர்களுக்கான கணித் திறன் போட்டியில் பங்கேற்றனர்.
             இரு  மாவட்டங்களில் இருந்து போட்டியில் கலந்து கொண்ட ஒரே பள்ளி
                          திருச்சி அண்ணா கோளரங்கத்தில் நடைபெற்ற கணித திறன் போட்டியில்  5 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 1065 மாணவர்கள் பங்கேற்றனர்.இப்போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்பதற்காக காலை 3.30 மணிக்கெல்லாம் ஆசிரியை முத்து மீனாள் வழிகாட்டுதலின்படி அவர்கள் பெற்றோர்களுடன் சென்று போட்டியில் பங்கேற்றனர்.சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து பள்ளி அளவில் மாணவ,மாணவியர் குழுவாக இப்போட்டியில் பங்கேற்றது இப்பள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.இதனில் வெற்றி பெறுபவர்களுக்கு வருகிற பிப்ரவரி மாதம் 28ம் நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் இப்போட்டிகளில் பங்கேற்றது குறித்து மாணவர்களும்,பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.இப்போட்டி குறித்த விழிப்புணர்வை மாணவ,மாணவியரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஏற்படுத்தினார்.இதற்கு தகுந்த வழிகாட்டுதலை திருச்சி அண்ணா கோளரங்க திட்ட இயக்குனர் திரு.லெனின் தமிழ் கோவன் அவர்கள் செய்திருந்தார்.
                         இந்தத் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 4 பிரிவுகளின் கீழ் பரிசுகள் வங்கப்படுகிறது. இதில் முதல் ஒரு படைப்புக்கு ரூ.5,000, இரண்டாம் பிரிவில் 2 படைப்புக்கு தலா ரூ.2,000, மூன்றாம் பிரிவில் 3 படைப்புகளுக்கு தலா ரூ.3,000, கடைசி பிரிவில் 30 படைப்புகளுக்கு தலா ரூ.500 வழங்கப்படும்.இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ,மாணவியர் பங்கேற்றனர்.

                                  இப்போட்டி குறித்து தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகி உள்ள செய்தியை காணலாம்.

1,065 children take Ramanujan memorial test 

 

A mathematics talent test conducted by the Anna Science Centre – Planetarium on Sunday evoked an overwhelming response from the students in understanding the various patterns and formula of the subject.
In all, 1,065 students from 20 schools in the central region, including Tiruchi, Ariyalur, Thanjavur, Pudukottai, Thanjavur, and Karaikudi participated in the test organised to mark the birth anniversary of eminent mathematician Ramanujan.
Although the test was open for students of classes 5 to 8, the question paper was common. “We noticed that junior students in the classes of 5 were competent, although they were not fully aware of the syllabus content of higher classes,” said I.K. Lenin Tamilkovan, Project Director of Anna Science Centre.
The test provided an opportunity to the pupils to understand the pattern of numbers and application of various skills such as aptitude, objectivity. It was aimed at enhancing their logical reasoning, thinking capability, and understand the wonders in mathematics.
Although the test was common for all the students, winners will be selected class-wise, he said. Cash prizes would be given to winners on February 28 when the birth anniversary of Sir C.V. Raman would be observed.

Students participating in the Mathematics talent test at Anna Science Centre- Planetarium in Tiruch

 பட விளக்கம் : தமிழ்நாடு அறிவியல் மையத்தின் சார்பில் மாணவர்களுக்கான கணித் திறன் போட்டியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி ) மாணவ,மாணவியர் பங்கேற்பு

No comments:

Post a Comment