Wednesday 14 June 2023

 

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு -தொடக்க நிலை மாணவர்களுக்கு கடலை மிட்டாய் , மாலை, ரோஜா பூ வழங்கி வரவேற்பு

 






தேவகோட்டை - தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1முதல் 5-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.பள்ளியின் மூத்த மாணவர்கள் இளம் வயது மாணவர்களுக்கு மாலை ,ரோஜா பூ , கடலை மிட்டாய் வழங்கி வரவேற்றனர்.

                      பல பள்ளிகளிலும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் நுழைவுவாயிலில் நின்று, பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளான்றே அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச பாடப் புத்தகங்கள், நோட்டு, காலணி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

                               சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை, ரோஜா பூ, பூங்கொத்து, கடலை மிட்டாய்  கொடுத்து மாணவ,மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியர்கள் செல்வமீனாள் ,ஸ்ரீதர்,முத்துலெட்சுமி ஆகியோர் வரவேற்றனர்..பள்ளியின் மூத்த மாணவர்கள் இளம் வயது மாணவர்களுக்கு மாலை ,ரோஜா பூ வழங்கி வரவேற்பு நடைபெற்றது.பின்னர் மாணவ,மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள், காலணி,  உள்ளிட்டவற்றை பெற்றோர்கள் வழங்கினார்கள் . இந்நிகழ்வுகளில் ஏராளமான பெற்றோர்கள் உட்பட பொதுமக்களும் பங்கு பெற்றனர். இளம் வயது மாணவர்கள் பள்ளிக்கு மிகுந்த ஆர்வத்துடன் , புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள மகிழ்ச்சியான முகத்துடன் வருகை தந்தனர்.

                                                                 இளம் வயது மாணவர்கள் சிலர் ஆர்வமுடன் பள்ளிக்கு புதியதாக வந்தனர். சில முதல் வகுப்பு மாணவர்கள்  முதல் முறை பள்ளிக்கு வருவதால் சிறிது நேரம் அழுதுகொண்டே வந்தனர்.பிறகு ஆசிரியர்கள் சமதானப்படுத்தி, மற்ற குழந்தைகளுடன் பழகி மகிழ்ச்சியாக பள்ளிசெயல்பாடுகளில் ஈடுபட்டனர்.இப்பள்ளியில் மாணவர்களின் பிறந்த நாள் உட்பட குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட தினங்களுக்கு சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் மூத்த மாணவர்கள் இளம் வயது மாணவர்களுக்கு மாலை ,ரோஜா பூ , கடலை மிட்டாய் வழங்கி வரவேற்றனர்.

 

 

வீடியோ :  https://www.youtube.com/watch?v=nJ7hsZzkbQ8

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் நேற்று, மாணவர்களுக்கு மரியாதை செய்து வரவேற்பு ...

Read more at: https://m.dinamalar.com/detail.php?id=2290553
பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் நேற்று, மாணவர்களுக்கு மரியாதை செய்து வரவேற்பு ...

Read more at: https://m.dinamalar.com/detail.php?id=2290553

No comments:

Post a Comment