Thursday 25 January 2018

 குடியரசு தின விழா
குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து   கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கி கொண்டாடுதல் 



தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது.


                  விழாவிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துமீனாள்  வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.குடியரசு தின விழா தொடர்பாக மாணவி காயத்ரி கவிதையும், குடியாட்சியும்,மக்கள் கடமையும் என்கிற தலைப்பில் மாணவர் ராஜேஷ் உரையும், தேசிய கீதத்தின் சிறப்புகளை மாணவி கீர்த்தியாவும் ,வேலு நாச்சியார் வேடமணிந்து மாணவி தேவதர்ஷினியும்,வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமணிந்து நாடகத்தை மாணவர்கள் ஐயப்பன்,சபரி,கார்த்திகேயன் ஆகியோரும் நடத்தினார்கள்.போக்குவரத்து கழக தேவகோட்டை கிளை மேலாளர் நாகராஜன் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும்  அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து  கடலை மிட்டாய் இனிப்பு  வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.விழா நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.விழாவில் பேசிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் போக்குவரத்து கழக தேவகோட்டை கிளை மேலாளர் நாகராஜன் கொடி ஏற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உள்ளார்.

No comments:

Post a Comment