Sunday 10 December 2017

நாட்டுப்பற்றுடன்,பாசத்துடன் இருப்போம் என்று உறுதி எடுங்கள் 

கல்லூரி முதல்வர் பேச்சு 

பாரதியார் வேடமணிந்து பாரதியார் பாடல் பாடி அசத்திய மாணவர்கள்

பாரதியார் பிறந்த தின விழா 



தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது.
                                                விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது,பாரதியார் ஒளிபடைத்த கண்களை பாடினார்.உங்கள் கண்களில் அந்த ஒளியை பார்க்கிறேன்.நாட்டின்மீது பாசம்வைத்து உறுதியுடன் வாழ்க்கையில் இருக்க உறுதி எடுங்கள்.பாரதியின் பாடல்களை வாழ்க்கை பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள்.இவ்வாறு பேசினார்.முன்னதாக மாணவர்கள்  முத்தய்யன் ,திவ்யஸ்ரீ,அம்முஸ்ரீ,தேவதர்ஷினி,வெங்கட்ராமன்,கீர்த்தியா,உமாமகேஸ்வரி ,ஜெனிபர் ,ஜெயஸ்ரீ,ஜனஸ்ரீ ,அய்யப்பன்,கிஷோர்குமார் ஆகியோர் பாரதியாரின் பாடல்களை பாடினர்கள்.பாரதியார் வேடமும் அணிந்து வந்து அசத்தினார்கள்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில் ஓடி விளையாடு பாப்பா,செந்தமிழ் நாடெனும்,ஒளிபடைத்த,நெஞ்சு பொறுக்குதில்லையே ,கும்மியடி,தீராத விளையாட்டுப் பிள்ளை  போன்ற பாடல்களை பாடினார்கள்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பாரதியார் பிறந்த தினவிழாவில் பாரதியார் வேடமணிந்து பாடல் பாடி பரிசு பெற்ற மாணவர்கள்.பரிசுகளை தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.



No comments:

Post a Comment