Sunday 25 June 2017

விகடனின் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர்கள் 





தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக விகடன் போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ் பெறுவது குறிப்பிடத்தக்கது

  விகடன் இதழின்   பாராட்டு  சான்றிதழை  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்க வாழ் இந்தியர் ராம் வள்ளியப்பன் தாயார் தேவகோட்டை செந்தாமரை ஆச்சி வழங்கி பாராட்டுதல் 


                    

                          சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  விகடன் நடத்திய செயல் திட்டம் FA போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும்,அவர்களை ஊக்கபடுத்திய ஆசிரியைகளுக்கும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

                       விகடன் சார்பாக பள்ளிக்கு  சுமார் 1100 ரூபாய் மதிப்புள்ள விகடன் பதிப்பக 3புத்தகங்களும் வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

               சான்றிதழ்கள் மற்றும் புத்தங்கங்கள் வழங்கிய  விகடன் ஆசிரியர் மற்றும் நிர்வாகம் சார்ந்தவர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றி தெரிவிக்கபட்டது.



 

No comments:

Post a Comment