Tuesday 25 February 2014

ஆரோக்கியமான குழந்தைகள் உருவாக அயோடின் உப்பை பயன்படுத்துவோம் கருத்தரங்கில் தகவல்.
தேவகோட்டை பிப் ​-26
                                                                    நல்ல சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமான குழந்தையாகவும் உருவாக அயோடின் உப்பை பயன்படுத்த வேண்டும் என உப்பு ஆய்வாளர் வாலிநோக்கம் பாரதி தெரிவித்தார்.
                                                                        தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் அயோடின் உப்பை பயன்படுத்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.மாணவி தேன்மொழி வரவேற்றார்.உப்பு ஆய்வாளர் வாலிநோக்கம் பாரதி மாணவர்களிடம் அயோடினே உப்பின் அவசியம் குறித்து பேசினார்.அவர் பேசுகையில்,
                                                             அயோடின் சத்துகுறைவால் நமக்கு மூளை வளர்ச்சி இன்மை,வாய்னீர்வடிதல்,கருச்சிதைவு,ஊமைத்தன்மை,மாலைகண் நோய் ,முன் கழுத்து கழலை நோய் முதலிய குறைபாடுகள் ஏற்படுகிறது.வருங்காலத்தில் மாணவர்கள் நல்ல சுறுசுறுப்பு உள்ள குழந்தைகளாகவும்,ஆரோக்கிய குழந்தைகளாகவும் உருவாகவேண்டும். அயோடின் சத்தை எதன் மூலமாக மக்களுக்கு செலுத்தலாம் என நினைக்கையில்,எண்ணெய் அல்லது ப்ரெட் மூலம் செலுத்தலாம் என யோசித்தனர்.ஆனால் எல்லா மக்களும் உணவிற்கு உப்பை பயன்படுத்துகின்றனர்.எனவே உப்பின் மூலம் அயோடின் சத்தினை செலுத்தலாம் என தீர்மானித்தனர்.கடல்வாழ் உயிரினங்களில் அயோடின்  சத்து உள்ளது.மீன் மண்டையில் அதிக அளவு அயோடின் உள்ளது.எனவே நாம் அனைவரும் இன்று முதல் அயோடின் இல்லாத உப்பு குப்பையிலே என உறுதி எடுப்போம் என்று பேசினார்.அயோடின் உப்பு அதிகமாக சேர்த்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுமா? என மாணவி சிவகாமி கேள்வி எழுப்பினார்.உப்பு எவ்வாறு தயாரிக்கபடுகிறது என மாணவி பரமேஸ்வரி கேள்வி கேட்டார்.மாணவிகளின் கேள்விகளுக்கு வட்டாணம் உப்பு ஆய்வாளார் முகமது காசிம்,உப்பு தயாரிக்கும் விதம் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.அயோடின் உப்பினை அதிகமாக சேர்த்தால் பாதிப்பு ஒன்றும் கிடையாது,சிறுநீரோடு கலந்து சென்று விடும் என்று கூறினார்.மாணவி தனம் நன்றி கூறினார்.ஆசிரியை முத்து மீனாள் கருத்தரங்கிர்க்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.
                                                        படவிளக்கம் :    தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் அயோடின் உப்பை பயன்படுத்த நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில்  உப்பு ஆய்வாளர் வாலிநோக்கம் பாரதி மாணவர்களிடம் அயோடின்  உப்பின் அவசியம் குறித்து பேசுகையில் எடுத்த படம்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்,உப்பு ஆய்வாளர் வட்டாணாம் முகமது காசிம் .Displaying Devakottai chairman scholl.jpg

No comments:

Post a Comment