Thursday 28 November 2013



தீ தடுப்பு மற்றும் மனோதத்துவம் பற்றிய விழிப்புணர்வு :

தேவகோட்டை 
தேவகோட்டை ஸ்ரீ அண்ணாமலையார் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை சார்பில் சேர்மன்மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மனோதத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர்செந்தில்குமார் தலைமை வகித்தார்
பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்அனைவருக்கும்கல்வி இயக்கம் மேற்பார்வையாளர் பீட்டர் லெமாயு முன்னிலை வகித்தனர்ஆசிரியர் செல்வம்வரவேற்றார். உதவி தொடக்ககல்வி அலுவலர் பால்ராஜ் விழிப்புணர்வு நிகழ்ச்சியைதுவக்கிவைத்தார்தமிழ்நாடு தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ மற்றும் அவரது குழுவினர்மாணவ மாணவிகளுக்கும்பொதுமக்களுக்கும்  தீ தடுப்பு குறித்து அறிவுரைகள் வழங்கி,செயல்முறை விளக்கம் செய்து ஒவோவோருவரும் தீ பற்றும் ஆபத்து காலங்களில் எப்படி தீயை  தடுப்பதுஉயிர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து விளக்கினார்கள்.மனோதத்துவ நிபுணர் முனைவர் சந்தியாகு மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் மனஅழுத்தத்திற்கான காரணங்கள் என்ன?  அதை எப்படி சரிசெய்வது என்பது குறித்து விளக்கினார்கள். மன அழுத்தம்  வரும் போது பெற்றோரிடமும்ஆசிரியரிடமும் மனம்விட்டுபேசுங்கள் என்று அறிவுரைகள் வழங்கினார்கள்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் போஸ்,அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்றுநர் ராஜசேகரன்,லயன்ஹரிஹரன்,ஆசிரியர்-ஆசிரியைகள்,மாணவ-மாணவிகள்பெற்றோர்கள்,பொதுமக்கள் மற்றும்பலர் கலந்துகொண்டனர்.ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.

Displaying IMG_2331.JPG

Displaying IMG_2403.JPG


No comments:

Post a Comment