Thursday, 1 October 2026

 

பள்ளிக்கே வந்து வானொலி நிகழ்ச்சி ஒலிப்பதிவு










































தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில், அகில இந்திய வானொலி மதுரை நிலையத்தின் ‘சிறுவர் பல்சுவை’ நிகழ்ச்சிக்கான ஒலிப்பதிவு பள்ளி வளாகத்திலேயே நடைபெற்றது.

                                வழக்கமாக மாணவர்கள் மதுரை வானொலி நிலையத்திற்கு நேரில் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த நிலையில், இந்த ஆண்டு வானொலி நிலையத்தின்  முயற்சியாக பள்ளிக்கே வந்து ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

                                   பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில், ஆசிரியைகள் சிவரஞ்சனி, ஆர்த்தி, பாண்டிசெல்வி, வினோதா ஆகியோர் மாணவர்களின் திறமைக்கு ஏற்ப நிகழ்ச்சிகளைத் தயாரித்து, அனைத்து மாணவர்களும் பங்கேற்க ஏற்பாடுகளை செய்தனர்.

                              மதுரை அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தயாரிப்பு அலுவலர் வேல்முருகன் மற்றும் பகுதி நேர அறிவிப்பாளர் நாகநந்தினி ஆகியோர் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்தனர். இந்நிகழ்ச்சி வரும் மாதம் வானொலியில் ஒலிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டது.


பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ‘சிறுவர் பல்சுவை’ நிகழ்ச்சிக்கான ஒலிப்பதிவில் மாணவர்கள் பங்கேற்றனர்.

வீடியோ : https://www.youtube.com/watch?v=B-Oib_VCukk



No comments:

Post a Comment